மேலும் அறிய

மீண்டும் தலைதூக்கும் `ஃப்ளூபோட்’ மால்வேர்.. உங்கள் ஸ்மார்ட்போனைக் காப்பது எப்படி?

`ஃப்ளூபோட்’ மால்வேரின் மூலம் பயனாளர்களுக்கு முதலில் மெசேஜ் அனுப்பப்பட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் வாய்ஸ் மெசேஜ் சேர்க்கப்பட்டு, மக்களைக் குழப்பி மால்வேரைப் பயனாளரின் போனில் சேர்க்கும்.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் தகவல்களைத் திருடும் வைரஸ்களை உருவாக்கும் `ஃப்ளூபோட்’ என்ற மால்வேர் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. ஹேக்கர்கள் இந்த மால்வேரின் மூலமாக, போனில் ஆபத்தான மால்வேர் இருப்பதாகவும், தகவல்கள் கசிவதாகவும் எச்சரிக்கை மெசேஜ்களை அனுப்புகின்றனர். இந்த மெசேஜ்கள் போலியானவை. அவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கைக் க்ளிக் செய்தால் வைரஸில் இருந்து பாதுகாப்பு பெறலாம் என அதில் கூறப்பட்டாலும், ஸ்மார்ட்போனில் வைரஸை இன்ஸ்டால் செய்வதற்காகவே அந்த மெசேஜ் பயன்படுத்தப்படுகிறது. 

`ஃப்ளூபோட்’ மால்வேரின் மூலம் பயனாளர்களுக்கு முதலில் மெசேஜ் அனுப்பப்பட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் வாய்ஸ் மெசேஜ் சேர்க்கப்பட்டு, மக்களைக் குழப்பி மால்வேரைப் பயனாளர்களின் போனில் சேர்க்கும். 

மீண்டும் தலைதூக்கும் `ஃப்ளூபோட்’ மால்வேர்.. உங்கள் ஸ்மார்ட்போனைக் காப்பது எப்படி?
போலி மெசேஜ்கள்

கடந்த மாதம், சைபர் பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ, `ஃப்ளூபோட்’ பாணியில் போலியாக மெசேஜ் தயாரித்து, பயனாளர்களுக்குப் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தியது. எனினும் தற்போது நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு மேற்கொண்ட ஆய்வின்படி, ஹாக்கர்கள் தற்போது மெசேஜ்களைப் பயன்படுத்தி, `ஃப்ளுபோட்’ மால்வேரை இன்ஸ்டால் செய்ய வைப்பதாகக் கூறுகிறார்கள். ஆண்ட்ராய்ட் ஃபோன்களுக்கு இவ்வாறு அனுப்பப்படும் மெசேஜ்கள் டெலிவரி அலெர்ட்கள் முதல் வேறு பல்வேறு அலெர்ட்களின் வடிவில் பயனாளர்களை ஃப்ளூபோட் மால்வேரை இன்ஸ்டால் செய்ய வைக்கும் நோக்கில் அனுப்பப்படுகின்றன. தற்போது, பயனாளர்களின் போட்டோக்கள் இணையத்தில் இருப்பதாகவும், லிங்கை க்ளிக் செய்தால் அவற்றைக் காணலாம் எனவும் கூறும் மெசேஜ்கள் பரப்படுவதாகவும் இந்தக் குழு தெரிவித்துள்ளது. 

`இந்த மெசேஜ்களில் அனுப்பப்பட்டிருக்கும் வார்த்தைகள் மிகக் குறைந்த காலகட்டத்திற்குள் மாறிக் கொண்டே இருக்கின்றன. மேலும் அவை மாறிக் கொண்டே இருக்கும். உங்கள் ஸ்மார்ட்ஃபோனுக்கு வரும் மெசேஜ்களில் இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள் என்று வரும் மெசேஜ்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்!’ என்று நியூசிலாந்து கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு வெளியிட்டுள்ள குறிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

`ஃப்ளூபோட்’ மால்வேர் உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் நுழைந்தால் உங்கள் கிரெடிட் கார்ட் விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள், எஸ்.எம்.எஸ் மெசேஜ்கள், பிரவுசர் தகவல்கள் முதலான பலவற்றையும் பார்க்க முடிவதோடு, அவற்றைக் கசிய வைக்கவும் முடியும். 

மீண்டும் தலைதூக்கும் `ஃப்ளூபோட்’ மால்வேர்.. உங்கள் ஸ்மார்ட்போனைக் காப்பது எப்படி?
போலி அலெர்ட்

ஃப்ளூபோட் மால்வேரில் இருந்து தப்பிப்பது எப்படி?

உங்கள் ஸ்க்ரீனில் திடீரென காட்டப்படும் செக்யூரிட்டி அப்டேட், புதிய ஆப்கள் எனக் கூறும் லிங்க் எதையும் க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். செக்யூரிட்டி அப்டேட், புதிய ஆப்கள் ஆகியவற்றை இன்ஸ்டால் செய்யப் பல்வேறு இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டியது இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

உங்கள் ஸ்மார்ட்போனில் ஃப்ளூபோட் மால்வேர் நுழைந்துவிட்டால், எந்த பாஸ்வேர்டும் புதிதாக பயன்படுத்தாமல், மொத்தமாக factory reset செய்துகொள்வது பாதுகாப்பானது. உங்கள் டேட்டாவை backup எடுத்துக் கொண்டு, factory reset செய்துகொள்ளலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget