Elon Musk on Twitter: ஊடகங்களுக்கு ரகசியத் தகவலை வெளியிட்டால் இதுதான் நடக்கும்... ஊழியர்களை எச்சரித்த எலான் மஸ்க்
உலகில் மிகப்பெரும் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். ஊடகங்களுக்கு டிவிட்டர் குறித்து ரகசியத் தகவல்கள் வெளியிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
உலகில் மிகப்பெரும் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
அவரது மின்னஞ்சல் லீக் ஆனதுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க். இதுதொடர்பாக டிவிட்டர் ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், "எப்போதாவது இதுபோன்று ஆனால்' மன்னிக்கப்படலாம், ஆனால் 'ரகசியத் தகவலை ஊடகங்களுக்கு அனுப்பினால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
Twitter is both a social media company and a crime scene
— Elon Musk (@elonmusk) December 10, 2022
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்க்கிற்கும் போடப்பட்டது.
அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். வேலை நீக்கம் அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக அமைந்தது. அதுமட்டுமல்ல, டிவிட்டரை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். ட்வீட்களின் எழுத்து வரம்பை 280-இல் இருந்து 420-ஆக உயர்த்த பரிந்துரை செய்த ட்விட்டர் பயனருக்கு "நல்ல யோசனை" என்று எலான் மஸ்க் பதிலளித்தார்.
புளூ டிக் போன்று கோல்டு, கிரே வண்ணங்களிலும் டிக் மார்க்கை அறிமுகப்படுத்தினார். வேலை நீக்கத்தில் பெண் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்தாக தெரிகிறது. இதையடுத்து, சில முன்னாள் பெண் ஊழியர்கள் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் எலான் மஸ்குக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.
ELON MUSK: டிவிட்டரில் அடுத்து வரப்போகும் அப்டேட் இதுதான்.. அள்ளி கொடுக்கும் எலான் மஸ்க்
"டிவிட்டரில் ஆண் ஊழியர்களை விட பெண் ஊழியர்கள் தான் அதிக அளவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது 63 சதவீதம் பெண் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், எலான் மஸ்க் பெண்களைப் பற்றி பல பகிரங்கமான பாரபட்சமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது பெண் ஊழியர்களிடம் பாகுபாடு காட்டியதன் மூலம் உறுதியாகியுள்ளது" என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் முன்னாள் பெண் ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.