மேலும் அறிய

ELON MUSK: டிவிட்டரில் அடுத்து வரப்போகும் அப்டேட் இதுதான்.. அள்ளி கொடுக்கும் எலான் மஸ்க்

டிவிட்டர் செயலியில் பயனாளர்களுக்கு அடுத்த வழங்கப்பட உள்ள புதிய வசதி தொடர்பாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்திய மதிப்பில், ரூ.3.5 லட்சம் கோடிக்கு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றினார். அன்று தொடங்கி தற்போது வரை எலான் மஸ்க்,  எப்போது எந்த குண்டை தூக்கி போடுவார் என்ற பரபரப்பிலேயே ட்விட்டர் பயனர்கள் உள்ளனர்.

அடுத்தடுத்து தொடரும் சர்ச்சைகள்:

வெரிஃபைடு டிக் வாங்க மாதாமாதம் 8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதிலிருந்து பல விவாதங்களை கிளப்பி வருகிறார். அப்படியே ஏதாவது ஒரு அப்டேட்டை அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தங்கள் வட்டாரங்கள் மூலம் அறிந்து செய்தி வெளியிட்டால் அதில் சென்று "அப்படியா?" என்று கேட்டு குட்டையை குழப்பி விடுகிறார் எலான் மஸ்க். அதனால் ட்விட்டரில் இது குறித்த விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. டிவிட்டர் நிறுவனத்தின்  50% ஊழியர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாலும், எலான் மஸ்கிற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன.  இதனிடையே, தரவுகள் சரிபார்க்கப்பட்டு பயனாளர்களின் கணக்கிற்கு ப்ளூ டிக் வழங்கும் முடிவும் பெரும் சர்ச்சையானது. அதைதொடர்ந்து, நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும்  தனிநபர்களுக்கு நீல நிற டிக் என,  மூன்று விதமான டிக்குகளுடன் அமல்படுத்தப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார். 

 

டிவிட்டரில் 420 வார்த்தைகளை எழுதலாம்?:

டிவிட்டரில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் எலான் மஸ்க், பொதுமக்களின் பல கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, அவர்களின் பரிந்துரைகள் நன்றாக இருந்தால் அவற்றை டிவிட்டர் செயலியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கிறார். அந்த வகையில்,  ட்விட்டர் பயனர் ஒருவர் ட்விட்டர் 2.0 எழுத்து வரம்பை 280க்கு பதிலாக 420 ஆக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதற்கு மஸ்க், "நல்ல யோசனை" என்று பதிலளிது இருந்தார்.

விரைவில் வருகிறது புதிய அப்டேட்:

அண்மையில், டிவிட்டரில் உள்ள த்ரெட் மற்றும் டிவிட்டர் ஃபைல்ஸ் ஆகிய வசதிகளை குறிப்பிட்டு, உண்மையில் நீண்ட பதிவிடும் வசதி நமக்கு தேவைப்படுகிறது என எலான் மஸ்க் பதிவிட்டு இருந்தார். அதனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய பயனர் ஒருவர், உங்கள் பொறியியல் மந்திரக்கோலை அசைக்கவும், என் இணைய மகனே என எலான் மஸ்கை டேக் செய்து இருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், அது கிட்டத்தட்ட தயாராக உள்ளது என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

 

அடுத்தடுத்து புதிய அப்டேட் - எலான் மஸ்க்

டிவிட்டர் செயலி சமூக வலைதளாமாக மட்டுமல்லாமல் ஒரு குற்றச்சம்பவம் நிகழும் இடமாகவும் உள்ளது. இதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க உள்ளதோடு, பல்வேறு புதிய அப்டேட்களும் அடுத்தடுத்து டிவிட்டரில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அண்மையில் இதுதொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டு இருந்த மற்றொரு டிவிட்டர் பதிவில், ட்விட்டர் இப்போது நிறைய ஸ்பேம்/ஸ்கேம் கணக்குகளை நீக்குகிறது, எனவே உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைவதை நீங்கள் காணலாம் என குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

நீண்ட காத்திருப்புக்கு முடிவு! கேலக்ஸி S25 பயனர்களுக்கு சாம்சங் வழங்கிய செம்ம சர்ப்ரைஸ்!
நீண்ட காத்திருப்புக்கு முடிவு! கேலக்ஸி S25 பயனர்களுக்கு சாம்சங் வழங்கிய செம்ம சர்ப்ரைஸ்!
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
Apple Vs Xiaomi: ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
சாம்சங் பிரியர்களுக்கு செம நியூஸ்! பிரீமியம் லுக், கம்மி ரேட்... சந்தையை கலக்க வந்த Galaxy S26 FE!
சாம்சங் பிரியர்களுக்கு செம நியூஸ்! பிரீமியம் லுக், கம்மி ரேட்! சந்தையை கலக்க வந்த Galaxy S26 FE!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: நாளை திங்கள்கிழமை.. என்ன பேசப்போகிறார் முதலமைச்சர் விஜய்? எதிர்பார்ப்பில் தமிழ்நாடு!
CM Vijay: நாளை திங்கள்கிழமை.. என்ன பேசப்போகிறார் முதலமைச்சர் விஜய்? எதிர்பார்ப்பில் தமிழ்நாடு!
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
பெட்ரோல், டீசல், கரண்ட் எதுவுமே வேணாம்! மணிக்கு 110 கி.மீ வேகம்! சாதனைக்கு தயாராகும் ரயில்வே!
கொளத்தூர் கொத்து பரோட்டா.. ஓட்ட நிதி..! தரம் தாழ்ந்த விமர்சனங்களை தொடுக்கும் தவெக!
கொளத்தூர் கொத்து பரோட்டா.. ஓட்ட நிதி..! தரம் தாழ்ந்த விமர்சனங்களை தொடுக்கும் தவெக!
Bigg Boss Tamil 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த பிரசாந்த்!
Bigg Boss Tamil 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த பிரசாந்த்!
பல ஆண்களுடன் திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம்
பல ஆண்களுடன் திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம்
Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!
Ajithkumar: ரிலீசானது Gladiators ட்ரெயிலர்... திரையரங்கம் அதிர கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!
TVK:
TVK: "திங்கள்கிழமை பதறாமல் பதிலுரை கேளுங்கள்.." உதயநிதிக்கு தவெக அட்வைஸ்!
சதுப்பு நிலத்தை காப்பதா? அழிப்பதா? - ரூ.21 கோடி திட்டத்துக்கு சௌமியா அன்புமணி கடும் எதிர்ப்பு
சதுப்பு நிலத்தை காப்பதா? அழிப்பதா? - ரூ.21 கோடி திட்டத்துக்கு சௌமியா அன்புமணி கடும் எதிர்ப்பு
Embed widget