அன்லிமிடெட் கால்.. டேட்டா.. 199 ரூபாய்க்கு ப்ளான்.. ஜியோ, ஏர்டெல், விஐ எது பெஸ்ட்?
ஏர்டெல்,ஜியோ,விஐ உள்ளிட்ட நிறுவனங்களில் 199 ரூபாய் திட்டங்கள் கொடுக்கும் சேவைகள் என்னென்ன?
கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கி வேலை செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக மொபைல் போன் பயன்பாடு மற்றும் இணையதள டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பிரீ பெய்ட் திட்டங்கள் அள்ளி கொடுத்து வருகின்றன. அந்தவகையில் குறைவான ரூபாய் முதல் அதிகமான கட்டணம் வரை ரூபாய் வாரியாக பல சேவைகளை கொடுத்து அசத்தி வருகின்றன. அத்துடன் இந்த மூன்று நிறுவனங்களிலும் ஒரே கட்டணத்தில் திட்டங்கள் உள்ளன. அந்தவகையில் 199 ரூபாய் திட்டத்தில் இந்த மூன்று நிறுவனங்களும் என்னென்ன சேவைகளை அளிக்கின்றன? அவற்றில் எது சிறந்தது?
ஏர்டெல் vs ஜியோ 199 பிரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் 199 ரூபாய் திட்டத்தில் 24 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ் எம் எஸ் மற்றும் ஒரு ஜிபி டேட்டா ஆகியவை வழங்கப்படுகிறது. அத்துடன் 30 நாட்கள் டிரையல் வெர்ஷனாக அமேசான் பிரைம் வசதியையும் ஏர்டெல் வழங்குகிறது. இதே ரூபாயில் ஜியோ 100 இலவச குறுஞ்செய்தி வசதி மற்றும் வரைமுறையில்லாத அழைப்புகள், ஒருநாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வசதி ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும்.
இது தவிர ஜியோவில் 149 ரூபாய்க்கு ஒரு மாத திட்டமும் உள்ளது. அந்தத் திட்டத்தில் 24 நாட்களுக்கு 100 குறுஞ்செய்தி,அன்லிமிடெட் கால் வசதி மற்றும் ஒருநாளைக்கு 1 ஜிபி டேட்டா ஆகியவை அளிக்கிறது. இந்தத் திட்டம் ஏர்டெலின் 199 ரூபாய் திட்டத்தைவிட மிகவும் குறைவான விலையை கொண்டுள்ளது.
ஏர்டெல் vs விஐ 199 பிரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல், ஜியோவை போல் விஐ நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 199 ரூபாயில் ஒரு திட்டத்தை கொடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தில் வோடோபோனும் ( விஐ ) நிறுவனம் 100 இலவச எஸ் எம் எஸ் மற்றும் அன்லிமிடெட் கால் வசதி, ஒருநாளைக்கு 1 ஜிபி டேட்டா வசதி ஆகியவற்றை 24 நாட்களுக்கு வழங்குகிறது. அத்துடன் விஐ படங்கள் மற்றும் விஐ டிவி உள்ளிட்டவற்றை பார்க்கும் வசதியும் இந்தத் திட்டத்தின் மூலம் உண்டு.
இந்த மூன்று நிறுவனங்களின் திட்டத்தை வைத்து பார்க்கும் போது 199 ரூபாய் திட்டத்தில் மற்ற நிறுவனங்களை ஜியோ அதிக டேட்டா மற்றும் நான்கு நாட்கள் கூடுதல் அவகாசம் ஆகியவற்றை தருகிறது. இந்த இரு நிறுவனங்களின் 199 ரூபாய் திட்டத்திற்கு ஜியோவின் 149 ரூபாய் திட்டம் பெரிய போட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: ஆஃபர் மழையில் நனைய தயாரா! - இளைஞர்களை குறிவைக்கும் அமேசான் ப்ரைம் டே.. !