Chandrayaan 3: நிலவில் நில அதிர்வு...ஆடிப்போன ரோவர், லேண்டர்...இஸ்ரோ அதிர்ச்சி தகவல்!
விக்ரம் லேண்டரில் உள்ள இல்ஸா கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வை பதிவு செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan 3: விக்ரம் லேண்டரில் உள்ள இல்ஸா கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வை பதிவு செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ அதிர்ச்சி தகவல்:
இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “விக்ரம் லேண்டரில் உள்ள இல்ஸா (ILSA) கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வை பதிவு செய்திருக்கிறது. இந்த நில அதிர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று இயற்கையாக ஏற்பட்ட நில அதிர்வு என்று இல்ஸா கருவி மூலம் தெரியவந்துள்ளது. ரோவரின் செயல்பாடுகளையும் விக்ரமில் உள்ள பிற கருவிகளையும் இல்ஸா கருவி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நிலவின் அதிர்வின் மையப்பகுதி எது என்பதை தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 31, 2023
In-situ Scientific Experiments
Instrument for the Lunar Seismic Activity (ILSA) payload on Chandrayaan 3 Lander
-- the first Micro Electro Mechanical Systems (MEMS) technology-based instrument on the moon --
has recorded the movements of Rover and other… pic.twitter.com/Sjd5K14hPl
சந்திரயான் 3:
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், 40 நாட்கள் பயணம் செய்து கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய 5வது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. தொடர்ந்து, லேண்டரில் இருந்து களமிறங்கிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் பயணம் செய்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
புதிய கனிமங்கள்& வாயுக்கள்:
அதன்படி, நிலவில் கந்தகம் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. நிலவில் கனிமம் இருப்பதை, ரோவரில் அனுப்பப்பட்ட லேசர் இன்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி கண்டுபிடித்துள்ளது. அதேபோல, எதிர்பார்த்தபடியே, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட வேதியியல் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனை (H) தேடும் பணி நடந்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்நிலையில், தி ஆல்பா பார்டிக்கல் எக்ஸ்.ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (’The Alpha Particle X-ray Spectroscope (APXS)) என்ற தொழில்நுட்பம் மூலம் ‘கந்தகம்’ இருப்பதை ரோவர் லேண்டர் மீண்டும் உறுதி செய்துள்ளது. ’Hinge’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோவரில் உள்ள கருவி ஆராய்ச்சி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.