BLON BL03 II: காதில் பாட்டு சுகமா கேக்கனுமா? BLON BL03 II ஹெட்செட் போட்டு கேளுங்க..
BLON BL03 II ஹெட்செட் பயன்படுத்துவதில் உள்ள சிறப்பம்சம், அதன் விலை ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இன்று செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் தேவையான ஒன்றாக மாறியிருப்பது ஹெட்செட். பொது இடங்களில் பாடல்கள் கேட்பதற்கும், சில நேரங்களில் போன் பேசுவதற்கும் இது உதவிகரமானதாக உள்ளது.
BLON BL03 II:
தரமான ஹெட்செட்களை பயன்படுத்தாவிட்டால் செவித்திறன் பாதிப்பு உண்டாகும் அபாயமும் உள்ளது. அந்த வகையில், BLON BL03 II ஹெட்செட் குறித்து கீழே காணலாம்.
இது ஒரு தரமான ஹெட்செட் ஆகும். இதன் முதல் வெர்சனில் இருந்த குறைகளை சரி செய்து, இரண்டாவது வெர்சன் வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவே, BLON BL03 II.
பேக்கிங்கில் இருப்பது என்ன?
IEM heads , detachable 0.78mm 2-pin silver Cable, 3 Pack Earbuds (3 Pairs in each ), Cloth Pouch.
இதன் முதல் வெர்சன் ஹெட்டின் வயர்கள் எளிதில் சிக்கிக்கொள்ளும். இந்த மாடலில் அந்த குறையை போக்கும் விதமாக சில்வர் கேபிளாக வயரை வடிவமைத்துள்ளனர்.
இந்த ஹெட்செட்டின் வடிவம் முதல் வெர்சனைப் போலவேதான் உள்ளது.
சத்தம்:
முதல் வெர்ஷனில் இருந்த Bass எஃபெக்ட்ஸ் இந்த ஹெட்செட்டில் உள்ளது. இதில் அதை கட்டுப்படுத்தி உள்ளனர். முதல் வெர்ஷனுடன் ஒப்பிடும்போது இதில் Bass குறைத்து இருக்கிறார்கள். Rumbling Sound நல்லா இருந்தது. Bass அதிகமா இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த ஹெட்செட் பிடிக்க வாய்ப்பு குறைவு.
Mids இந்த ஹெட்செட்டில் தெளிவாக உள்ளது. இதனால் ஆண் மற்றும் பெண் பாடகர்கள் குரல்கள் மிகவும் துல்லியமாக இருக்கும். முதல் வெர்ஷனுடன் ஒப்பிடும்போது இதில் மிகவும் அருமையாக பாடல் வரிகள் கேட்கிறது. .
Highs:
Treble sound crisp தெளிவாக இருக்கிறது. ஆனால், சத்தம் அதிகமாக வைத்து கேட்டால் பாடல் இரைவது போல உள்ளது.
Sound Stage & Imaging:
முதல் வெர்சன்ல Sound Stage நல்லா அருமையா Wide'a இருந்தது. இதிலும் அதேபோல அருமையாக இருந்தது. Imaging வழக்கம் போல அருமை.. ஒவ்வொரு இசைக்கருவியோட சவுண்டும் தெளிவா எங்க இருந்து வருதுன்னு pin point பண்ணலாம்.
மொத்தத்தில் இந்த ஹெட்செட்டில் பாடல் கேட்கும்போது, அருமையான தெளிவான ஒலியை கொடுக்கின்றது. எல்லா வகையான இசைக்கும் இந்த ஹெட்செட் பொருத்தமானது ஆகும்.
BLON II - 3 வடிவங்களில் வருகிறது. 3.5mm, 4.4mm balanced மற்றும் Type-C. இதில், எது வேண்டுமானாலும் நீங்கள் பார்த்து வாங்கலாம். புதிதாக IEM டிரை பண்ண போறேன் என்றால் கண்டிப்பாக வாங்கலாம்.
இதன் விலை ரூபாய் 2 ஆயிரத்து 549 ஆகும். திரைப்பட நிகழ்ச்சிகளில் பாடகர்கள் தங்கள் காதுகளில் பொருத்திப் பாடும் ஹெட்செட் இதுவே ஆகும்.





















