Watch Video: கூப்பிட்டால் கார் கதவு திறக்கும்! டெஸ்லாவுக்கு போட்டியாக களமிறங்கும் ஸ்மார்ட் கார்!
அதி நவீன தொழில்நுட்பங்களை விரும்பும் பயனர்களை ஜிடு கார்கள் குறிவைக்கும் என்று ஜிடுவின் செயல்பாட்டுத் தலைவர் லுவோ கேங் தெரிவித்துள்ளார்.
பிரபல பைடு (Baidu) நிறுவனத்திற்கு சொந்தமான எலெக்ட்ரிக் கார் நிறுவனமான ஜிடு (Jidu ) ஆட்டோ நிறுவனம் தனது புதிய "ரோபோ" கான்செப்ட் ” காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
என்னென்ன இருக்கு இந்த காரில் ?
கடந்த புதன்கிழமை (ஜூன் 8 ) Xirang இல் நடைபெற்ற ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பின் போது இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரில் வடிவமைக்கப்பட்டுள்ள கதவுகளில் கைப்பிடிகளே கிடையாது . பின்னர் எப்படி திறக்கும் என்றால் voice recognition என்னும் குரல் கட்டளை மூலம் மட்டுமே திறக்க முடியும். autonomous என்னும் தன்னாட்சி நிலையில் 4 லெவல்களை இந்த கார் கொண்டுள்ளது. அவற்றிற்கு மனித தலையீடுகள் தேவையே இல்லை. நெட்வொர்க் மோசமாக உள்ள நிலையிலோ அல்லது குரல் கட்டளைகள் சரியாக கேட்காத நேரத்தில், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள Qualcomm (QCOM.O) 8295 என்னும் சிப்செட் ஆஃப்லைன் உதவியை பயனாளருக்கு வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தானாக உருவாகும் கார் தொழில்நுட்பத்தை பைடு உருவாக்கியிருந்தாலும் , ஜிடுவானது இரண்டு லிடார்களையும் 12 கேமராக்களையும் காரில் சொந்தமாக உருவாக்கியிருக்கிறது.லிடார்கள் என்பது ரேடார்களைப் போன்ற ஒரு தேடுதல் தொழில்நுட்பமாகும் . இதில் ரேடியோ அலைகளை விட துடிப்புள்ள லேசர் அலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
Baidu's electric-vehicle arm Jidu Auto has launched a ‘robot’ concept car, equipped with autonomous driving software technology https://t.co/nbV6o5lARH pic.twitter.com/ZxiD5l06qx
— Reuters (@Reuters) June 9, 2022
டெஸ்லாவுக்கு போட்டி ?
மின்சார வாகனங்களை வணிகமயமாக்குவதில் டெஸ்லாவின் (TSLA.O) வெற்றிக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஸ்மார்ட் கார்களை உருவாக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் Baidu இன் EV கார் தொழில்நுட்பம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.”புதிய காலத்தில் புத்திசாலித்தனமான பயணத்திற்கான பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை ஜிடு ரோபோகார் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதி நவீன தொழில்நுட்பங்களை விரும்பும் பயனர்களை ஜிடு கார்கள் குறிவைக்கும்” என்று ஜிடுவின் செயல்பாட்டுத் தலைவர் லுவோ கேங் புதன்கிழமை ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
#Baidu's electric vehicle firm #Jidu unveils first 'robot' car https://t.co/YT6dvCDce6 #Sharjah24https://t.co/3nVObNy0cb
— الشارقة24 (@sharjah24) June 8, 2022
எதிர்கால திட்டம் :
இந்த EV கார்கள் சீனாவின் கிழக்கு நகரமான Ningbo இல் உள்ள Hangzhou Bay இல் தயாரிக்கப்படும், அங்கு பங்குதார நிறுவனமான Geely பல ஆலைகளைக் கொண்டுள்ளது. சீன வாகன உற்பத்தியாள நிறுவனமான பைடு (Baidu) ஜீலியின் இணை நிதியுதவியுடன், இந்த ரோபோ கான்செப்ட் காரைப் போலவே 90% மாடலை வருகிற 2023 ஆம் ஆண்டு பெருமளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.