சைபர் அட்டாக்குகளில் இருந்து தப்பிக்க லாக்டவுன் மோட்.. அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்..
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐஓஎஸ், ஐபாட் ஓஎஸ் மற்றும் மேக் ஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் லாக்டவுன் மோட் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐஓஎஸ், ஐபாட் ஓஎஸ் மற்றும் மேக் ஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் லாக்டவுன் மோட் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொதுவாகவே ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்ற பேச்சு உண்டு. ஆனால், சைபர் தாக்குதல்களுக்கு ஆப்பிள் தயாரிப்புகளும் விதிவிலக்கல்ல என்று பெகாசஸ் மற்றும் ஹெர்மிட் ஸ்பைவேர் ஆகியவையும் நிரூபித்தன. ஹெர்மிட் ஸ்பைவேர் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இரண்டையும் பாதித்தது சமீபத்தில் தெரியவந்தது. இதனால் இதுபோன்ற தாக்குதல்கள் வருங்காலங்களில் ஏற்படாமல் இருப்பதற்காக “லாக்டவுன் மோட்” என்ற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள் நிறுவனம். ஆனால், வெகு சிலருக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்ற குறிப்புடன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். லாக்டவுன் வசதியில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது, அது எப்படி சைபர் தாக்குதல்களில் இருந்து காக்கும் என்று பார்க்கலாம்.
லாக்டவுன் வசதியானது செட்டிங்ஸில் சில மாறுதல்களை செய்வதன் மூலம் சாதனங்களை மேலும் பாதுகாப்பானதாக மாற்றமுடியும் என்று ஆப்பிள் கூறியுள்ளது. இந்த லாக்டவுன் மோடானது சில நாடுகளே நிதியுதவி செய்து உருவாக்கும் உயர்ரக டிஜிட்டல் அட்டாக்குகளுக்கு எதிராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வசதியானது ஐஓஎஸ் 16, ஐபாட் ஓஎஸ் 16, மற்றும் மேக் ஓஎஸ் வென்ச்சுரா ஆகியவைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இந்த வசதி வெகுசிலருக்கே கொடுக்கப்படும் என்று கூறிள்ளது.
இந்த லாக்டவுன் மோட் எப்படி வேலை செய்யும்?
மெசேஜ்கள்: மெசேஜ்களுடன் வரும் புகைப்படங்கள், லிங்குகள் ஆகியவை ப்ளாக் செய்யப்படும். லிங்குகள் பயன்படுத்த முடியாத வகையில் அதன் ப்ரிவியூ ஆஃப் செய்யப்படும்.
ப்ரவுசிங்: ஜிட் (ஜஸ்ட் இன் டைம்) ஜாவா ஸ்க்ரிப்ட் கம்பைலேஷன் உள்ளிட்ட பல்வேறு ஸ்க்ரிப்ட்கள் அடிப்படையிலேயே தடுக்கப்படும். ஆனாலும், சில வெப்சைட்டுகளை லாக்டவுன் மோடிலும் பயனாளர் விரும்பினால் பயன்டுத்த முடியும்.
அழைப்புகள்: உங்களுக்கு பரிட்சயம் அல்லாத அல்லது அதற்கு முன்பு பேசியிருக்காத காண்டாக்ட்களிடமிருந்து வரும் வீடியோ கால் ரெக்வெஸ்ட் மற்றும் அதே போன்ற பல்வேறு அழைப்புகளின் ரெக்வெஸ்ட்களும் தடை செய்யப்படும்.
லாக்டவுன் மோடில் ஐபோனில் இருந்து மேக்கிற்கு செய்யும் இணைப்புகள் தடை செய்யப்படும்.
வெளியில் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யும் கான்ஃபிகரேஷன் ஃபைல்கள் இன்ஸ்டால் செய்ய அனுமதி மறுக்கப்படும். அதே நேரத்தில் லாக்டவுன் மோடில் மொபைல் டிவைஸ் மேனேஜ்மெண்ட்டை பயன்படுத்த இயலாது.
லாக் டவுன் மோடை எப்படி ஆக்டிவேட் செய்வது?
இந்த வசதி சிஸ்டம் செட்டிங்ஸில் உள்ள ப்ரெஃபெரன்ஸில் வரும். இது டீஃபால்ட்டாக இயக்கத்தில் இருக்காது. இந்த அமைப்பு அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதாக நினைத்தால் அதை டிசேபிள் செய்ய முடியும். இந்த வசதி வரும் வரை காத்திருக்கவும் என்றும், இந்த வசதி பற்றிய மேலும் தகவல்களை இந்த வசதி பயனாளர்களுக்கு அறிமுகமானதும் தெரிவிக்கிறோம் என்று ஆப்பிள் கூறியுள்ளது.