மேலும் அறிய

ChatGPT: இனி Siri-யில் சாட்ஜிபிடி பயன்படுத்தலாம் - வெளியானது புதிய ios அப்டேட்!

ChatGPT:

உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ChapGPT Apple-ன் Siri மூலம் பயன்படுத்த கிடைக்கும் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. 

சாட் ஜிபிடி(ChatGPT)

ஏதையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் அதற்கான விடையை தேடி நாம் செல்லும் முதல் இடம் கூகுள். கூகுளில் கிடைக்காத பதில்களும் இல்லை, தகவல்களும் இல்லை என்ற நிலை உள்ளது. ஆனால், ஏ.ஐ. தொழில்நுட்பம் வருகைக்கு பிறகு தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றம். அப்படி OpenAI எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு அறிமுகமானது தான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி(ChatGPT).

 பொதுவாக நாம் ஒரு விஷயம் குறித்து கூகுளில் தேடினால்,  அதுதொடர்பானது மட்டுமின்றி பல்வேறு விதமான தகவல்களை நமக்கு வழங்கும். அனால், இந்த சாட்ஜிபிடி சரியாக நாம் எதை தேடுகிறோமோ அது குறித்து, தானாக செயற்கை நுண்ணறிவு மூலமாக ஆராய்ந்து தேவையான மற்றும் துல்லியமான தகவல்களை மட்டும் கொடுக்கும். அதோடு, உதாரணத்திற்கு கட்டுரை, மின்னஞ்சல் மற்றும் கதை என எதை கேட்டாலும், எழுதி கொடுக்கும் திறனையும் சாட்ஜிபிடி கொண்டுள்ளது. 

Apple ஐ.ஒ.எஸ். அப்டேட்:

 iOS 18.2, iPadOS 18.2, and macOS Sequoia 15.2 ஆகிய சாஃப்வேர் அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதோடு, நுண்ணறிவு சிறப்பம்சங்களையும் Apple நிறுவனம் வெளியிட்டுள்ளது. க்ரியேட்டிவிட்டி மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் Apple செயற்கை நுண்னறிவு வசதியை Siri உடன் இண்டக்ரேசன் செய்து அப்டேட் கொடுத்துள்ளது. 

Siri அல்லது Apple-ன்  ’Writing Tools’ உடன் ChatGPT-ஐ இணைத்தது மூலம் அலுவலகம் அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தேவையாக தகவல்களை எழுதி தரும் அப்டேட் இது. உங்களுக்கு தேவையான விசயத்தை கமெண்ட் செய்துவிட்டால் தவறு இல்லாமல் எழுதிக் கொடுத்துவிடும். அதோடு, ஏ.ஐ. மூலம் தேவையான ஃபோட்டோவையும் பெறலாம். 

இமேஜ் ப்ளேக்ரவுண்ட் (Image Playground):

இமெஜ் ப்ளேக்ரவுண்ட் என்ற புதிய வசதி Apple-ல் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தேவையான புகைப்படங்களை அதை பற்றி விவரித்தால் கிடைத்துவிடும். கார்ட்டூன், ஸ்டைலிஸ் விசுவல்ஸ் என நாம் கொடுக்கும் விவரங்களுக்கு ஏற்ப புகைப்படங்கள் கிடைக்கும். இது தனியாகவும் ஆப் ஸ்டோரில் செயலியாக கொடுக்கப்பட்டுள்ளது. மெசேஜ் உள்ளிட்ட செயலில் எனேபிள் செய்யும் வசதியும் உண்டு.

ஜென்மோஜி (Genmoji):

இந்த ஜென்மோஜி வசதி பயனர்கள் இமோஜி போலவே இருக்கும் ஸ்டிக்கர்களை உருவாக்க்கும். மெசேஜ் செய்யும்போது இமோஜிகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றவாறு ஸ்டிக்கர்கள் கிடைக்கும்.

ஐஃபோன் 'Notes’ செயலில் புதிதாக “Image Wand” என்ற ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் ஓவியங்கள், வரைபடங்களை மெருகேற்ற பயன்படுத்தலாம்.

ஐஃபோன் கேமரா மூலம் ’QR code’ ஸ்கேன் செய்வது, ஏர்டெக் லோசேசன் ஷேரிங், சுடோகோ பசில்ஸ் ஆகியவையும் புதிய அப்டேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By Election: 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்! ஈரோடு கிழக்கில் தி.மு.க. வெற்றி! டெபாசிட் கூட வாங்காத நாம் தமிழர்!
Erode East By Election: 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்! ஈரோடு கிழக்கில் தி.மு.க. வெற்றி! டெபாசிட் கூட வாங்காத நாம் தமிழர்!
Pakistan PM Shehbaz Sharif: இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் கொடுத்த டாஸ்க்...
இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் கொடுத்த டாஸ்க்...
Arvind Kejriwal: வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோAravind kejriwal Lost : மண்ணைக் கவ்விய கெஜ்ரிவால்! சாதித்து காட்டிய மோடி! தலைநகரை கைப்பற்றிய பாஜகStory of Parvesh Verma BJP | கெஜ்ரிவாலுக்கு தண்ணி காட்டியவர்.. டெல்லியின் முதல்வராகும் பர்வேஷ் சிங்?Manapparai School Issue | குழந்தைக்கு பாலியல் தொல்லைஅதிரடி காட்டிய போலீஸ் மணப்பாறை பள்ளியில் பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By Election: 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்! ஈரோடு கிழக்கில் தி.மு.க. வெற்றி! டெபாசிட் கூட வாங்காத நாம் தமிழர்!
Erode East By Election: 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்! ஈரோடு கிழக்கில் தி.மு.க. வெற்றி! டெபாசிட் கூட வாங்காத நாம் தமிழர்!
Pakistan PM Shehbaz Sharif: இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் கொடுத்த டாஸ்க்...
இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி.. பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் கொடுத்த டாஸ்க்...
Arvind Kejriwal: வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Erode Election Result LIVE : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி! டெபாசிட்டை இழந்த நாம் தமிழர்
Erode Election Result LIVE : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி! டெபாசிட்டை இழந்த நாம் தமிழர்
ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது -  எம்பி மாணிக்கம் தாகூர்
ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது - எம்பி மாணிக்கம் தாகூர்
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம்  - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம் - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Parvesh verma: கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பிய பர்வேஷ் வர்மாவின் சொத்து இத்தனை கோடியா?
Parvesh verma: கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பிய பர்வேஷ் வர்மாவின் சொத்து இத்தனை கோடியா?
Embed widget