Airtel Hike: ஜியோவைத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்: எந்த பிளானுக்கு எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?
Airtel Price Hike : தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான ஏர்டெல், சேவைக்கான கட்டணத்தை அதிகரித்து திருத்தி அமைத்துள்ளது.
ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவையின் புதிய கட்டண அமலாக்கமானது வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனமாக ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜியோ நிறுவனம் மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் உள்ளிட்டவைகளை மாற்றி அதிகரிப்பதாக வெளியிட்டது.
இதையடுத்து, ஏர்டெல் நிறுவனமும் பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு ஆகிய சேவைகளின் மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் உள்ளிட்டவைகளை அதிகரித்துள்ளது. இதற்கான அறிவிப்புகளை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பானது, வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரீபெய்ட் கட்டண விவரங்கள்:
போஸ்ட்பெய்டு கட்டண விவரங்கள்:
மேற்குறிப்பிட்ட , கட்டண அதிகரிப்பானது, வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால், ரீசார்ஜ் செய்ய நினைக்கும் பயனர்கள், முன்கூட்டியே உங்களுக்கு விருப்பமான திட்டங்களை அறிந்து , ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.