Aadhaar Phone Number Update: ஆதாரில் தொலைபேசி எண்ணை மாற்றவேண்டுமா? இதோ உங்களுக்கான வழிமுறைகள்!
புதிய எண்ணினை ஆதார் எண்ணில் சேர்க்க, பழைய எண்ணினை மாற்ற மிகவும் எளிய வழிகள் இதோ!
அரசின் அனைத்து சேவைகள் தொடங்கி கொரோனா தடுப்பூசி செலுத்தினாலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்குத்தான் ஒருமுறை கடவுச்சொல் வரும். எனவே ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைந்துள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்வது அவசியமான ஒன்று.
ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்த டிஜிட்டல் பரிவர்த்தணைக் காலத்தில் அரசின் அனைத்து வசதிகளையும், திட்டங்களையும் பெறுவதற்கு ஆதாரின் பயன்பாடு அவசியமாகி விட்டதே என்றே கூறலாம். வங்கி கணக்கு துவங்குவதற்கு, புதிய பான் கார்டு வாங்குவதற்கு, புதிய செல்போன் எண் பெற, வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய என்பது போன்ற முக்கியமான சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டத்தில், நாம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று நினைத்தால் கூட ஆதார் எண் என்பது மிக முக்கியதானமாகிவிட்டது. எனவே அனைவரும் ஆதார் எண்ணுடன் தங்களது மொபைல் எண் இணைந்துள்ளதா? என்பதனை முதலில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அரசின் எந்த சேவையினை பெறுவதற்கு விண்ணப்பித்தாலும், நாம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு தான் ஒருமுறை கடவுச்சொல் (one Time password) அனுப்பப்படும். மொபைல் எண் இணைப்பில் இல்லை என்றால் எந்தவொரு சேவையினையும் நம்மால் பெற முடியாது. எனவே அந்த வேலையினை தான் முதலில் நாம் செய்து முடிக்க வேண்டும். புதிய எண்ணினை ஆதார் எண்ணில் சேர்க்க வேண்டும் என்றாலும், பழைய எண்ணினை மாற்ற வேண்டும் என்றாலும் தற்போதுள்ள காலக்கட்டத்தில் மிகவும் எளிய வழிகளில் இதனை செய்து விடலாம். இதோ உங்களுக்கான வழிமுறைகள் குறித்து தற்போது இங்கு பார்க்கலாம்.
- முதலில் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு Adhar enrollment Form ஒன்று கொடுக்கப்படும்.
- அந்த விண்ணப்பித்தில், நம்முடைய நாம் மாற்றம் செய்ய விருக்கும் மொபைல் எண்ண அல்லது புதிய மொபைல் எண்ணினை குறிப்பிட வேண்டும்.
- அடுத்ததாக நாம் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை(Aadhaar Enrollment Form) ஆதார் மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
- பயோ மெட்ரிக் முறையில் நம்முடைய அனைத்து விபரங்களையும் சரிபார்க்கப்படும்.
- பின்னர் மொபைல் எண்ணிற்கு UIDAI லிருந்து நமக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
நம்முடைய ஆதார் அட்டையில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை என UIDAI ஏற்கனவே அறிவித்துள்ளது. அதில், ஆதாரில் மொபைல் எண்ணினை சேர்ப்பதற்கும், பழைய எண்ணினை மாற்றுவதற்கும் அருகிலுள்ள ஆதார் ஆதார் மையத்திற்கு உங்கள் ஆதார் அட்டையினை மட்டும் எடுத்துச்சென்றால் மட்டும் போதுமானது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.