மேலும் அறிய

உங்க ஸ்மார்ட்ஃபோன் தொலைந்துவிட்டால்..! பேங்க் பேலன்ஸை காப்பாத்த இத ஃபாலோ பண்ணுங்க..!

வீட்டுக்காவது ஒற்றைப்பூட்டு தான். ஆனால் நீங்கள் கையடக்க கணினி காணாமல் போனால் இத்தனை பாதுகாப்பு நடவடிக்கை தேவைப்படுமா என்று ஆச்சர்யம் ஏற்படுத்தினாலும் இவையெல்லாம் மிகவும் அவசியாமானவை.

செல்போன்.. அதை பத்து நிமிடம் கூட பிரிந்திருக்க முடியாத அளவுக்கு மனிதன் அதைச் சார்ந்திருக்க ஆரம்பித்துவிட்டான். ஸ்மார்ட் போன் தான் கைக்கடிகாரம், அதுதான் தனிப்பட்ட காரியதரிசி, அது தான் தகவல் சுரங்கம், அதுதான் வங்கி, அதுதான் சகலமும் என்றாகிவிட்டதால் ஃபோனை மறந்துவிட்டால் பெர்மிஷன் போட்டுவிட்டு திரும்பவந்து எடுத்துச் செல்லும் அளவுக்கு மனிதன் அதற்கு அடிமையாகிவிட்டான்.

ஒருவரைப் பற்றி அறிந்துகொள்ள அவருடைய ஸ்மார்ட் போனை ஆராய்ந்து பார்த்தாலே போதும் என்று சொல்லும் அளவுக்கு அத்தனையும் அதிலே ஒளிந்து கிடக்கிறது.

ஒருவேளை உங்கள் ஸ்மார்ட் ஃபோன் காணாமல் போய்விட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பதறாமல் இத்த 8 விஷயங்களைச் செய்யுங்கள்.

1.சிம் கார்டை ப்ளாக் செய்யுங்கள்..
உடனடியாக உங்களின் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுடைய சிம் கார்டை பிளாக் செய்யச் சொல்லுங்கள். இதனால், உங்கள் ஃபோனைக் களவாடியவர்களால் வங்கிச் சேவைக்காக ஓடிபி பெற முடியாது. நீங்கள் அதே ஃபோன் நம்பருக்கு புதிய சிம்கார்டு வாங்கி வேறு மொபைலில் அதைப் போட்டு பயன்படுத்தலாம்.

2.ஆன்லைன் பேங்கிங்கை தடை செய்யுங்கள்..
உங்கள் செல்ஃபோன் காணாமல் போனவுடனேயே உங்களின் வங்கியைத் தொடர்பு கொண்டு அனைத்து வகையான ஆன்லைன் ட்ரான்சாக்‌ஷன்களையும் உடனே நிறுத்துமாறு கோருங்கள். உங்களின் தொலைதொடர்பு நிறுவனம் சிம் கார்டை டீஆக்டிவேட் செய்ய குறைந்தபட்சம் சில மணி நேரம் ஆகலாம் என்பதால், அதற்கு முந்தைய ஆபஷனாகக் கூட நீங்கள் இதனைச் செய்யலாம். 

3.வங்கியுடன் இணைந்த மொபைல் எண்ணை மாற்றலாம்..
இன்னொரு வழியும் இருக்கிறது. ஃபோன் தொலைந்தவுடன் அருகிலுள்ள உங்களின் வங்கிக் கிளைக்குச் சென்று உங்கள் வங்கிக் கணக்குடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை மாற்றிவிடுங்கள். அனைத்து கடவுச்சொற்களையும் மீண்டும் மாற்றியமையுங்கள்.

4.ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றுங்கள்..
அருகிலிருந்து ஆதார் மையத்துக்குச் சென்று உங்களின் ஆதார் எண்ணில் தொலைபேசி எண்ணை மாற்றுங்கள். உங்களின் ஆதார் எண்ணில் தகவல்களை மட்டும் திருடர்கள் கைப்பற்றிவிட்டால் அவர்களால் உங்கள் பெயரில் மிகப்பெரிய குற்றங்களை செய்துவிட முடியும். எனவே, ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவதில் சற்றே எச்சரிக்கையாக இருங்கள்.

5.தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட யுபிஐ பேமென்ட்டை டீ ஆக்டிவேட் செய்யுங்கள்
ஆன்லைன் வங்கிச் சேவைகளை தடுத்து நிறுத்திய பின்னர், தவறாமல் உங்கள் மொபைல் வாலட்டுடன் இணைக்கப்பட்ட யுபிஐ பேமென்ட்களை டீ ஆக்டிவேட் செய்துவிடுங்கள்.

6. அப்படியே பேடிஎம், கூகுள் பேயையும் முடக்குங்கள்..
அப்படியே உங்கள் மொபைல் ஃபோன் எண்ணுடன் தொடர்பில் உள்ள பேடிஎம், கூகுள் பே சேவைகளை முடக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் ஹெல்ப்டெஸ்குகளைத் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள்.

7. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள்..
​உங்கள் செல்ஃபோனில் உள்ள இமெயில் ஐடி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்துவிதமான சமூக வலைதள கணக்குகளையும் டீஅக்டிவேட் செய்துவிடுங்கள். அப்படிச் செய்வதல் உங்கள் கணக்கிலிருந்து போலியான தகவல்களை திருடர்கள் பரப்ப முடியாது.

8.போலீஸில் புகார்..
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல். போலீஸில் புகார் தெரிவியுங்கள். போலீஸில் பதிவு செய்யப்பட்டும் முதல் தகவல் அறிக்கையை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களின் பணமோ அல்லது வேறு தகவலோ தொலைந்து போன மொபைல் வாயிலாக திருடப்பட்டிருந்தால் வங்கிக்குச் செல்லும் போது எஃப்ஐஆர் நகலை எடுத்துச் செல்லுங்கள்.

வீட்டுக்காவது ஒற்றைப்பூட்டு தான். ஆனால் நீங்கள் கையடக்க கணினி காணாமல் போனால் இத்தனை பாதுகாப்பு நடவடிக்கை தேவைப்படுமா என்று ஆச்சர்யம் ஏற்படுத்தினாலும் இவையெல்லாம் மிகவும் அவசியாமவை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget