மேலும் அறிய

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன ரணதுங்கா! கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

இலங்கை அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரணதுங்கா, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சு

கிரிக்கெட்டில் எப்போதும் தனித்துவம் வாய்ந்த கேப்டன்களாக வரலாற்றில் எப்போதுமே சிலர் இருப்பார்கள். அவர்களில் இலங்கையின் கேப்டன் ரணதுங்காவிற்கு தனி இடம் உண்டு. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையை இன்று வரை தன்வசம் வைத்துள்ள ஒரே கிரிக்கெட் வீரர் ரணதுங்கா.

ரணதுங்காவிற்கு என்னாச்சு?

களத்தில் ஆக்ரோஷமாகவும், வீரர்களுக்கு உறுதுணையாகவும் செயல்படும் கேப்டனான ரணதுங்காவை, 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்த இந்திய கேப்டன் கபில்தேவ் சமீபத்தில் சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

கபில்தேவுடன் நிற்கும் ரணதுங்கா மிகவும் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு காட்சி தருகிறார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பருமனான தோற்றத்தில் இருந்த ரணதுங்கா இந்தளவிற்கு மெலிந்து இருப்பது ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இதை நம்ப முடியவில்லை என்று கூறுகின்றனர். சிலர் ரணதுங்காவிற்கு ஏதேனும் உடல்நலக்குறைவா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இலங்கைக்காக உலகக்கோப்பையை வென்ற ஒரே கேப்டன்:

தற்போது 60 வயதாகிய ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் அணியை கட்டி ஆட்சி செய்தவர் என்றே கூற வேண்டும். அவரது கேப்டன்சியில் அவர் ஜெயசூர்யா, சமிந்தா வாஸ், அரவிந்த் டி சில்வா, கலுவிதரானா, முத்தையா முரளிதரன் ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றினார்.

இந்திய, பாகிஸ்தான் அணிகளைப் போலவே ஆசிய கண்டத்தில் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பதற்கு ரணதுங்காவின் பங்கும் முக்கியமானது ஆகும். 1996ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது. அந்த போட்டியில் ரணதுங்கா 37 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்தார்.

அரசியலில் கால்தடம்:

1982ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 18 வயதிலே அறிமுகமான ரணதுங்கா 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 38 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 105 ரன்கள் எடுத்துள்ளார். 269 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 49 அரைசதங்களுடன் 7 ஆயிரத்து 456 ரன்கள் எடுத்துள்ளார். 205 முதல்தர கிரிக்கெட்டில் ஆடி 25 சதங்கள், 63 அரைசதங்களுடன் 11 ஆயிரத்து 641 ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 307 போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 55 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 491 ரன்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் 16 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 79 விக்கெட்டுகளையும்,  முதல்தர கிரிக்கெட்டில் 94 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 98 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2000ம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரணதுங்கா அதன்பிறகு அந்த நாட்டு அரசியலில் ஈடுபட்டார். அந்த நாட்டு எம்.பி,யாகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
DMDK: யாருடன் கூட்டணி.. இன்று அறிவிக்கிறார் பிரேமலதா.. எதிர்பார்ப்பில் தேமுதிக தொண்டர்கள்!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Jana Nayagan: ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி.. உண்மையை போட்டுடைத்த ஹெச்.ராஜா!
Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
US Venezuela China: சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
சீனாவிற்கு ஆப்பு; அமெரிக்காவின் கையில் வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி; ட்ரம்ப்பை வெளுத்த டெல்சி
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
The Raja Saab Review: பிரபாஸ் நடிப்பு நல்லாருக்கு.. ஆனால் படம்? - தி ராஜா சாப் விமர்சனம் இதோ!
The Raja Saab Review: பிரபாஸ் நடிப்பு நல்லாருக்கு.. ஆனால் படம்? - தி ராஜா சாப் விமர்சனம் இதோ!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Embed widget