World Athetics Championships 2022: உலக தடகள சாம்பியன்ஷிப்: மகளிர் ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அன்னு ராணி
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி தகுதி பெற்றுள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்தப் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றதால் அனு ராணிக்கு கடும் சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதில் அன்னு ராணி தன்னுடைய முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார். அடுத்து தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் 55.35 மீட்டர் தூரம் வீசினார். இதன்காரணமாக கடைசி வாய்ப்பில் அவர் 60 மீட்டருக்கு அருகே வீசினால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.
ANNU ENTERS FINALS 🚨
— IndiaSportsHub (@IndiaSportsHub) July 21, 2022
The NR holder makes her Second Consecutive finals at Worlds
💥With a third throw of 59.60 Annu qualify for Javelin final as 8th best
💥Third Final for India at #WorldAthleticsChamps pic.twitter.com/SXwtUwVA5L
இந்தச் சூழலில் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பை பயன்படுத்திய அனு ராணி சிறப்பாக ஈட்டி எறிந்தார். கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அத்துடன் 8வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். அன்னு ராணி 8வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் 2வது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி முன்னேறி அசத்தியுள்ளார்.
நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர் ஆகியோருக்கு பின்பு அனு ராணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவினாஷ் சேபிள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இறுதிப் போட்டியில் 11வது இடத்தை பிடித்தார். அதேபோல் நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு சென்ற முரளி ஸ்ரீசங்கர் 7வது இடத்தை பிடித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்