Watch Video: 5 ஆண்டுகளுக்குப் பின் பந்து வீசிய கோலி... வைரலாக காரணம் என்ன?
2016 டி-20 உலகக்கோப்பை அரை இறுதியில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விராட் கோலி பெளலிங் செய்திருந்தார். 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச டி-20 போட்டியில் நேற்று விராட் பெளலிங் செய்திருந்தார்.
ஐசிசி டி-20 உலக்ககோப்பை தொடரின் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இங்கிலாந்து எதிரான தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் வெற்றியை ஈட்டிய இந்திய அணி, நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறாக, ரோஹித் ஷர்மா கேப்டனாக இருக்க, விராட் கோலி கோலி பெளலிங் செய்ய என ‘ஜாலியாக’ மற்றுமொரு வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி.
துபாய் ஐசிசி அகாடெமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அப்போது, முதல் இன்னிங்ஸின் 7வது மற்றும் 13வது ஓவரை வீச வந்தார் கோலி. முதல் ஓவரில் 4 ரன்களும், அடுத்த ஓவரில் 8 ரன்களும் விட்டுக்கொடுத்தார், விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. எனினும், கோலி பெளலிங் வீசினார் என்பது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்த வீராட் பெளலிங் செய்த வீடியோ வைரலாகி வருகின்றது. 2016 டி-20 உலகக்கோப்பை அரை இறுதியில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விராட் கோலி பெளலிங் செய்திருந்தார். 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச டி-20 போட்டியில் நேற்று விராட் பெளலிங் செய்திருந்தார்.
It's Kohli 🆚 Smith 🔥
— T20 World Cup (@T20WorldCup) October 20, 2021
Just not how you imagined it to be...#T20WorldCup https://t.co/CNdQnMEOeZ
டெஸ்ட், ஒரு நாள், சர்வதேச டி-20 கிரிக்கெட் என அனைத்து ஃபார்மேட்களில் பந்துவீசியுள்ளார் விராட். டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுத்ததில்லை என்றாலும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 4, சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
இதற்கு முன்பு விராட் கோலி பந்துவீசிய மொமெண்ட்ஸ்:
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய பயிற்சி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 152 ரன்கள் எடுத்தது. இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் ஓப்பனர்கள் ராகுல் (39), ரோஹித் (60) அதிரடி காட்ட, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் (38) தன் பங்கிற்கு ரன் சேர்க்க 17.5 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டி போட்டியை வென்றது இந்திய அணி. இனி, சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி களம்காண உள்ளது. முதல் போட்டி வரும் அக்டோபர் 24-ம் தேதி நடைபெற உள்ளது, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்