Asian Games 2023: பி.டி.உஷாவின் தேசிய சாதனை சமன்.. 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அசத்திய ஆட்டோரிக்ஷா ஓட்டுநரின் மகள் வித்யா ராம்ராஜ்..!
1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பிடி உஷா 55.42 வினாடிகளில் பந்தயத்தை கடந்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒன்பதாவது நாளில் அதாவது அக்டோபர் 2ஆம் தேதி இந்தியா சிறப்பாகத் தொடங்கியது. இந்த நாளில், முதல் ஸ்பீடு ஸ்கேட்டிங் 3000 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்தியா வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதன்பிறகு தேஜஸ்வின் சங்கர், வித்யா ராம்ராஜ் ஆகியோர் தடகளப் போட்டியில் பதக்கம் பெறும் நம்பிக்கையை வலுப்படுத்தினர். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.
Vithya you beauty 😍
— India_AllSports (@India_AllSports) October 2, 2023
Vithya Ramraj has equaled National Record mark (55.42s) of legend PT Usha in 400m Hurdles.
Vithya topped her Heat & is through to FINAL #IndiaAtAsianGames #AGwithIAS #AsianGames2023 pic.twitter.com/6751RZK9Y8
பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் வித்யா ராம்ராஜ் அபாரமாக செயல்பட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். வித்யா ராம்ராஜ் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதுவே அவரது தனிப்பட்ட பெஸ்ட். இதன் மூலம் பி.டி.உஷாவின் தேசிய சாதனையை வித்யா சமன் செய்துள்ளார்.
1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பிடி உஷா 55.42 வினாடிகளில் பந்தயத்தை கடந்தார். இருப்பினும், இது உஷா வெல்ல போதுமான நேரமாக இல்லாமல் இறுதிப் போட்டியில் 4வது இடத்தை பிடித்தார். ஆனால், இந்திய அளவில் தேசிய சாதனையாக பதிவானது. 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கடந்த 39 ஆண்டுகளாக மற்ற இந்திய வீரர்களால் முறியடிக்க முடியாத இந்திய சாதனையை தற்போது வித்யா படைத்தார். பி.டி.உஷாவின் இந்த சாதனையை எந்த விளையாட்டு வீரரும் நெருங்க முடியாமல் இருந்த நிலையில் இப்போதுதான் தொட முடிந்தது.
யார் இந்த வித்யா ராம்ராஜ்..?
வித்யாவின் சகோதரியும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் களம்:
கோவையில் வசிப்பவர் வித்யா. கொரோனாவுக்கு பிறகு அவர் சென்னைக்கு மாறினார். இவரது தந்தை ஆட்டோரிக்ஷா ஓட்டுனர். வித்யாவுக்கு ஒரு சகோதரியும் உள்ளார். அவர் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறார். அவருடைய சகோதரியின் பெயர் நித்யா. வித்யா மற்றும் நித்யா இரட்டை சகோதரிகள், இருவரும் தடகளத்தில் இந்தியாவிற்காக களமிறங்கியுள்ளனர். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வித்யா பங்கேற்கும் நிலையில், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் நித்யா பலம் காட்டி வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு இரட்டைச் சகோதரிகள் இணைந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை.
கடந்த வாரம் இதே வித்யா ராம்ராஜ் சண்டிகரில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியின் ஐந்தாவது லெக்கில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.43 வினாடிகளில் ஓடி தங்கம் வென்றார். அப்போது, ஒரு நொடியில் தவறவிட்ட வித்யா, இன்று 55.43 வினாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்தார்.
மற்றொரு சிறந்த நிகழ்வு:
இந்தியாவின் நட்சத்திர தடகள வீரர்களில் ஒருவரான தேஜஸ்வின் சங்கர், இன்று நடைபெற்ற டெகாத்லானில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டெகாத்லானின் முதல் போட்டியான நீளம் தாண்டுதல் போட்டியில் அவர் முதலிடம் பிடித்தார். தேஜஸ்வின் சங்கர் தனது முதல் முயற்சியிலேயே 7.37 மீட்டர் குதித்தார். இதன் மூலம் 903 மதிப்பெண்கள் பெற்றார்.