Virat Kohli Photo | ’அப்போவே எழுதி வெச்சிட்டாங்க’ - இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் சிறுவயது போட்டோ..
விராட் கோலி எப்போதுமே ஒரு சிறந்த தலைவராவதற்கு விதிக்கப்பட்டிருந்தார், அதன் பிரதிபலிப்பு அவரது குழந்தைப் பருவத்திலேயே காணப்பட்டிருக்கிறது
இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் 18 ஆண்டு பழமையான புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாக வருகிறது . விராட் கோலி அனைவரையும் கவரும் ஒரு கேப்டன், மேட்சின்போது இவரின் தலைமைக்கு ஒரு தனி இடம் உண்டு ."கேப்டன் கூல் " தோனிக்கு பிறகு அனைவராலும் பாராட்டப்பட்ட கேப்டன், இந்திய அணியின் பெஸ்ட் டெஸ்ட் கேப்டன், ஒருநாள் சர்வதேச மற்றும் டி 20 போட்டிகளில் சிறந்த தலைவர்களில் ஒருவர் என கொண்டாடப்படுபவர் விராட் கோலி .
இந்த தலைமைப்பொறுப்பு அவருக்கு சிறுவயதில் இருந்தே விதிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறலாம் . தனது பள்ளிக்காலத்தில் இருந்தே தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை உறுதி செய்திருக்கிறார் விராட். தனது ஒன்பதாம் வகுப்பில் இருந்தே இதற்கான பணி நடந்துகொண்டு இருந்திருக்கிறது. பள்ளியின் சுற்றறிக்கையில், விராட் கோலி உட்பட மூன்று மாணவர்கள் டெல்லியின் யு -15 அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், கோஹ்லி அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளி அறிவித்திருக்கிறது.
" விராட் சிறந்த கிரிக்கெட் வாய்ப்புகளுக்காக மட்டுமே ஒன்பதாம் வகுப்பில் பாசிம் விஹாரில் உள்ள சேவியர் கான்வென்ட் பள்ளிக்கு மாற்றப்பட்டு இருந்தார். 2002-03 பாலி உம்ரிகர் டிராபியில் டெல்லியின் யு -15 அணியின் கேப்டனாக இருந்தார் , அது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, அன்று நடந்த தொடரில் 34.40 சராசரியாக 172 ரன்கள் எடுத்துள்ளார் .
விராட்டின் அசத்தலான கேப்டன்ஷிப் மற்றும் தலைமைப்பொறுப்பை கண்டு வாய்ப்புகள் அவரை தேடி வந்தன அணைத்து வாய்ப்புகளையும் மிக நேர்த்தியாக பெற்றுக்கொண்டு பணியாற்றினார் .டெல்லியில் பிறந்த இவர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்தியாவை வழிநடத்திச்சென்று 2008-ஆம் ஆண்டில் கோப்பையை வென்றுவந்தார். அந்த வெற்றிக்குப் பின்னர் இந்தியா அணிக்காக அடித்து ஆடத் தொடங்கினார் விராட்.
அதன் பின்பு சிறந்த பேட்ஸ்மேனாக வரும் காலங்களில் உயர்ந்துள்ளார் .இந்திய அணியின் பெரிய பக்கபலமாக இருந்து வரும் விராட் கோலியின் தலைமையின் கீழ் ,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற மேட்ச்களை இந்தியா வென்றது.