India Medal Tally: ஒரே நாளில் 2 தங்கம்... மொத்தம் 17 பதக்கங்கள் ; இது இந்தியாவின் பாராலிம்பிக் படை!
பாராலிம்பிக்கில் இன்று ஒரே நாளில், 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது இந்தியா.
பாராலிம்பிக் போட்டிகளின் வரலாற்றில் இந்திய அணி அதிபட்சமாக ஒரே தொடரில் மொத்தமாகவே அதிகபட்சமாக 4 பதக்கங்களை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, 1960-ம் ஆண்டு முதல் பாராலிம்பிக்கில் பங்கேற்று வரும் இந்தியா 1960-2016 கால கட்டங்களில் மொத்தமாகவே 12 பதக்கங்களைதான் வென்றுள்ளது. ஆனால் இம்முறை ஒரே நாளில் மூன்று, நான்கு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் இந்த முறை பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி மொத்தமாக அதிக பதக்கங்களை வெல்வது உறுதியாகிவிட்டது.
செப்டம்பர் 4-ம் தேதி முடிவின் நிலவரப்படி, இந்தியாவின் பதக்க என்ணிக்கை 17-ஐ தொட்டுள்ளது. 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களோடு இந்தியா விளையாடி வருகின்றது. டோக்கியோ பாராலிம்பிக்கின் கடைசி நாளான நாளை இந்தியாவுக்கு பேட்மிண்டனில் பதக்கம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பேட்மிண்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தடகளத்திற்கு பிறகு இந்தியா பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் முக்கியமான விளையாட்டு பேட்மிண்டன் தான். ஏற்கனவே இன்று பேட்மிண்டனில் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையும், நாளையும் பதக்கத்திற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
மொத்த பதக்க விவரம்
#Olympics - Waiting for the Good news#Paralympics - Catching up with the overflowing great news 🤩
— IndiaSportsHub (@IndiaSportsHub) September 4, 2021
4 🥇
7 🥈
6 🥉 pic.twitter.com/XbXYorNK5e
முதல் 10 பதக்கங்கள் விவரம்:
India Medals so far in Paralympics 2020 #Tokyo2020
— IndiaSportsHub (@IndiaSportsHub) September 1, 2021
🥇Avani | Shooting
🥇Sumit | Athletics
🥈Bhavina | TT
🥈Nishad | Athletics
🥈Yogesh | Athletics
🥈Devendra | Athletics
🥈Mariyappan | Athletics
🥉Sundar | Athletics
🥉Singhraj | Shooting
🥉Sharad | Athletics
Congratulations!! pic.twitter.com/rmfq4CwYh3
நேற்று, பாராலிம்பிக்கில் இந்தியா கைப்பற்றிய 3 பதக்கங்கள் விவரம்:
A Historic Day 📚🤩
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) September 3, 2021
🔷Praveen Kumar sets Asian Record, winning #ParaAthletics #Silver
🔷Avani Lekharia becomes first #IND woman to win two #Paralympics medals with her #ParaShootingSport #Bronze
🔷Harvinder Singh wins #IND's first #ParaArchery medal with his #Bronze pic.twitter.com/sQwsDDqcoV
இன்று, பாராலிம்பிக்கில் இந்தியா கைப்பற்றிய 4 பதக்கங்கள் விவரம்
A recap of what #IND have achieved at the #Paralympics today 👇
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) September 4, 2021
✨Won 2⃣ gold medals!
✨Double podium finishes in 2 disciplines - #ShootingParaSport & #ParaBadminton
P.S - 17 medals (and counting 🤯) at #Tokyo2020 - More than 4 times as many as Rio 2016!
Incredible. pic.twitter.com/gg6OV6R4cl
17 பதக்கங்களுடன் பாராலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா 26-வது இடத்தில் உள்ளது. பாரா வீரர் வீராங்கனைகள் வெற்றி பெறுவது அவர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல், இந்தியாவுக்கு மட்டுமானதாக இல்லாமல், பார்ப்பவர் ஒவ்வொருவருக்குமானதாக நம்பிக்கை தருவதாக உள்ளது. இந்தியா, பாராலிம்பிக் வரலாற்றில் தனது பெஸ்ட் பர்ஃபாமென்ஸை பதிவு செய்து வருகின்றது.