Thisara Parera Retires: இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக செயல்பட்டு வந்தவர் 32 வயதான திசாரா பெரேரா. இவர், 2009ஆம் ஆண்டு தனது தனது 20 வயதில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாட தொடங்கினார். 2006 மற்றும் 2008 யு19 உலகக்கோப்பை, நான்கு டி20 உலகக்கோப்பை (2010, 2012, 2014, 2016), மூன்று உலககக் கோப்பை (2011, 2015, 2019), இரண்டு சாம்பியன்ஸ் டிராபி (2013, 2017) ஆகிய ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ளார். இலங்கை அணிக்காக பல வெற்றிகளை குவித்து கொடுத்த திசாரா பெரேரா, கேப்டனாக இலங்கை அணியை சிறப்பாகவும் வழிநடத்தினார். உள்நாட்டு கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆறு பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திசாரா பெரேரா அறிவித்துள்ளார். இவரின் அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மட்டுமல்லாமல், அந்த அணியின் முன்னாள், இன்னாள் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வு குறித்து திசாரா பெரேரா கூறுகையில், இளம் வீரர்களுக்கு வழிவிடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவும் ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன் என்று கூறினார். மேலும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் திசாரா பெரேரா கூறினார்.

Thank you Ayya https://t.co/9GXMQOXZ82
— Thisara perera (@PereraThisara) May 4, 2021

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோர் திசாரா பெரேராவுக்கு வாழ்த்து கூறினர்.

Thanks Dimma https://t.co/0qDWKmeUTV
— Thisara perera (@PereraThisara) May 3, 2021

166 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள திசாரா பெரேரா 2,338 ரன்கள் மற்றும் 175 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 84 டி20 போட்டிகளில் விளையாடி 1204 ரன்களும், 51 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கொரோனா காலகட்டத்தில் நிறைய வீரர்கள் தங்களின் ஓய்வு முடிவை அறிவித்து வருகின்றனர்.
குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் ஓய்வை அறிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் தோனி தனது ஓய்வை அறிவித்தார். அவரை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இது போன்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். பெரேராவை பொறுத்த வரை இலங்கையில் அதிக ரசிகர்களை கொண்டனர். ஆல்ரவுண்டராக தன்னை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்தவர். இக்கட்டான சூழலில் இலங்கை அணியை பலமுறை மீட்டவர் என பெருமைகள் பலவற்றிக்கு சொந்தக்காரர்.
பெரேராவின் ஓய்வு இலங்கை அணிக்கு பேரிழப்பு என ஓய்வு பெற்றவீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.