![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: கால்பந்து வீரர் - புத்த துறவி.. சொகுசு வாழ்க்கை துறந்து பொதுவாழ்க்கைக்கு வந்த ஸ்வீடன் கால்பந்து வீரர்!
கெவின் லிடின் கடந்த 2019ம் ஆண்டு இத்தாலியில் நடந்த சீரி சியில் பகானீஸ் கால்சியோ 1926 மற்றும் ஏசி பிசாவுக்காக மிட்ஃபீல்டராக விளையாடினார்.
![Watch Video: கால்பந்து வீரர் - புத்த துறவி.. சொகுசு வாழ்க்கை துறந்து பொதுவாழ்க்கைக்கு வந்த ஸ்வீடன் கால்பந்து வீரர்! Swedish ex-player Kevin Lidin incredible transformation Buddhist monk - watch video Watch Video: கால்பந்து வீரர் - புத்த துறவி.. சொகுசு வாழ்க்கை துறந்து பொதுவாழ்க்கைக்கு வந்த ஸ்வீடன் கால்பந்து வீரர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/fd6aafd5b1ed91056e4f5be797c15f231715177168133571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னாள் ஸ்வீடிஷ் கால்பந்து வீரரான கெவின் லிடின், துறவியாக மாறுவதற்காக தனக்கு மிகவும் விருப்பமான கால்பந்து வாழ்க்கை விட்டுவிட்டார். இந்த திட்டமிட்ட பயணத்திற்கு பிறகு அவர், யோகா பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
25 வயதான கெவின் லிடின் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பயணத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது, நெட்டிசன்கள் மற்றும் கால்பந்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
இன்ஸ்டாகிராம் பதிவில், “மொட்டையடித்த தலையுடன் ஆரஞ்சு நிற ஆடை அணிந்த துறவியாக மாறினேன்.
யோகா செய்து துறவியாக மாறியது எனக்கு உண்மையான மகிழ்ச்சியை தருகிறது. நீங்கள் ஒருவருக்கு கொடுக்கும்போது, அது உங்கள் இதயத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. அப்போது பெறுபவர் பரிசை ஏற்றுக்கொள்கிறார், அதை பாராட்டுகிறார். இந்த நேரத்தில் மகிழ்ச்சியானது இருவராலும் அனுபவிக்கப்படுகிறது. கொடுப்பது கடினமாக இருக்க வேண்டியதில்லை. உங்களுக்கு வசதியாக இருப்பதைக் கொடுங்கள் அல்லது தன்னார்வப் பணிக்கு உதவுங்கள். நோக்கம்தான் முக்கியம்.” என்று தெரிவித்தார்.
மேலும், “2021-ல் எனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கை முடிந்தது. மகிழ்ச்சி என்றால் என்ன, வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று என்னை நானே கேட்க ஆரம்பித்தேன்.
View this post on Instagram
பிறருக்கு உதவுவதே எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். மகிழ்ச்சியின் அறிவியலைப் படித்து, துறவியாகி, யோகா பயிற்சி செய்த பிறகு, மகிழ்ச்சி என்றால் என்ன என்பதற்கான பதிலைக் கண்டேன்.
அதை எப்படிப் பெறுவது மற்றும் எப்படி வைத்திருப்பது என்பதை நான் கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.
யார் இந்த கெவின் லிடின்..?
கெவின் லிடின் கடந்த 2019ம் ஆண்டு இத்தாலியில் நடந்த சீரி சியில் பகானீஸ் கால்சியோ 1926 மற்றும் ஏசி பிசாவுக்காக மிட்ஃபீல்டராக விளையாடினார்.
View this post on Instagram
இத்தாலியின் பிரீமியர் கால்பந்து லீக்கில் சிறந்த வீரராக வலம் வருவதே அவரது இலக்காக இருந்தது. ஆனால், களத்தில் பல காயங்களில் இந்த கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கடந்த 2021ம் ஆண்டில் தொடர் காயம் காரணமாக கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஒருமுறை தாய்லாந்து சென்றபோது, கெவின் லிடின் யோகா பயிற்சி செய்ய தொடங்கினார். கோபங்கனில் யோகா பயிற்றுவிப்பாளராக பணியை தொடங்கினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)