Singapore Open 2022: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் இந்தியர்களுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஒற்றையர் பிரிவில் மூன்று பேரும், இரட்டையர் பிரிவில் ஒரு இந்திய ஜோடியும் காலிறுதிக்கு சென்றுள்ளனர்.
![Singapore Open 2022: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் இந்தியர்களுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன? Singapore Open 2022: Indian Shuttlers Sindhu, Prannoy and Saina face tough challenge in Quarterfinals of Singapore open 2022 Singapore Open 2022: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் இந்தியர்களுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/14/94f2d60503cedbae4bc4dcf5bf2e82f41657794463_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், மஞ்சுநாத், பிரணாய், அஷ்மிதா சாலிஹா, துருவ் கபிலா-அர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், பிரணாய் மற்றும் அஷ்மிதா,துருவ் கபிலா-அர்ஜூன் மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருந்தனர்.
இந்நிலையில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால் மற்றும் பிரணாய் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜூன் மற்றும் துருவ் கபிலா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்தச் சூழலில் காலிறுதியில் இந்திய வீரர்கள் யார் யார் உடன் மோத உள்ளனர் தெரியுமா?
பி.வி.சிந்து vs ஹான் யூ
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து சீனாவின் ஹான் யூவை எதிர்த்து விளையாட உள்ளார். ஹன் யூவை சிந்து 2019ஆம் ஆண்டு ஜப்பான் ஓபனில் எளிதாக தோற்கடித்துள்ளார். மேலும் உலக தரவரிசையில் 19ஆவது இடத்தில் இருக்கும் ஹான் யூவை எதிர்த்து சிந்து நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார். ஆகவே நாளைய காலிறுதி போட்டியில் சிந்து வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது.
சாய்னா vs அயோ ஒஹாரி:
15 மாதங்களுக்கு பிறகு ஒரு சர்வதேச பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் வீராங்கனை அயோ ஒஹாரி சர்வதேச தரவரிசையில் 30வது இடத்தில் உள்ளார். இவர் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் 2வது சுற்றுடன் வெளியேறினார். இந்தோனேஷிய ஓபனில் இரண்டாவது சுற்றுடன் வெளியேறினார். ஆகவே இவரும் முதல் முறையாக இந்தாண்டு அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பார்.
பிரணாய் vs நரோகா:
மலேசிய ஓபன் பேட்மிண் தொடரில் பிரணாய் காலிறுதி வரை முன்னேறினார். மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இவர் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். இந்தச் சூழலில் சிங்கப்பூர் ஓபனில் காலிறுதிக்கு பிரணாய் முன்னேறியுள்ளார். இவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நரோகாவை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்திவிடுவார்.
இவர்கள் தவிர ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா-அர்ஜூன் ஜோடி இந்தோனேஷியாவை சேர்ந்த முகமது அஷான் -செட்டைவான் ஜோடியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்தோனேஷியா ஜோடி உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)