Rafael Nadal : களிமண் ராஜா.. ஸ்பெயினின் தங்க மகன்.. ஓய்வு பெற்றார் ரஃபெல் நடால்
Rafael Nadal : சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஓய்வு பெற்றார் டென்னிஸ் ஜாம்பாவன் ரஃபேல் நடால்.
மலகாவில் நடைப்பெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் ஸ்பெயின் தோல்வி அடைந்ததை அடுத்து சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஓய்வு பெற்றார் டென்னிஸ் ஜாம்பாவன் ரஃபேல் நடால்.
ஓய்வுப்பெற்றார் நடால்:
டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் தனது தனித்துவம் மற்றும் திறமையால் கடந்து வந்த டென்னிஸ் பயணத்தை தோல்வியுடன் முடித்துக் கொண்டார், ஸ்பெயின் அணி டேவிஸ் கோப்பையில் நெதர்லாந்து அணியிடம் 2-1 என தோற்று வெளியேறியது. இதன் மூலம் தனது டென்னிஸ் பயணத்தை முடித்துக்கொண்டார் ரஃபெல் நடால்.
22 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான நடால், நெதர்லாந்தின் போடிக் வான் டி சாண்ட்சுல்ப்பிடம் 6-4 என்ற கணக்கில் தோற்றார்; ஸ்பெயினுக்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான கால் இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற் செட் கணக்கில் முன்னிலை வகித்தார். ஆனால் அவரது இந்த ஆட்டம் மலகாவில் கூடியிருந்த ஸ்பெயின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது, ஏனெனில் ஸ்பெயினின் அதிர்ச்சிகரமான தோல்வியால் உள்நாட்டுக் ரசிகர்கள் திகைத்துப் போனார்கள்.
Botic van de Zandschulp secures a 1-0 lead in the tie! 🇳🇱
— Davis Cup (@DavisCup) November 19, 2024
He takes down Rafael Nadal 6-4 6-4 for a dream start in Malaga 👏#DavisCup | @Boticvdz | @KNLTB pic.twitter.com/3F13u9Kf4B
தற்போதைய விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ், தனது போட்டியை வென்றம் போதிலும், ஆனால் அந்த வெற்றி ரஃபேல் நடால் தனது வாழ்க்கையில் மேலும் ஒரு போட்டியை விளையாட போதுமானதாக இல்லை, ஏனெனில் அவர் இப்போது டென்னில் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக ஓய்வு பெற்றுள்ளார்.
டேவிஸ் கோப்பை 2024 இன் அரைஇறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்வதற்கு முன்பு ஸ்பெயினின் தேசிய கீதத்தின் போது அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
An emotional anthem for @RafaelNadal 🥹#DavisCup | @RFETenis pic.twitter.com/wZNt3kmB9x
— Davis Cup (@DavisCup) November 19, 2024
கண்ணீர் மல்க பேசிய நடால்:
"நான் வென்ற பட்டங்கள் எல்லாம் எண்ணிக்கையில் உள்ளன, எனவே மக்கள் அதை அறிந்திருக்கலாம், ஆனால் நான் அதிகம் நினைவில் கொள்ள விரும்புவது மல்லோர்காவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதனாக இருப்பது தான்" என்று நடால் கூறினார். "எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. நான் மிகச் சிறிய குழந்தையாக இருந்தபோது எனது கிராமத்தில் டென்னிஸ் பயிற்சியாளராக இருந்த என் மாமா, ஒவ்வொரு நொடியிலும் என்னை ஆதரிக்கும் ஒரு சின்ன குடும்பம்… நான் ஒரு நல்ல மனிதனாக, அவர்களின் கனவுகளைப் பின்பற்றிய குழந்தையாக நினைவில் கொள்ள விரும்புகிறேன். நான் கனவு கண்டதை விட சாதித்தேன்."
உண்மையாக சொல்ல வேண்டுமென்றல், எனது 20 வருட தொழில்முறை டென்னில் வாழ்க்கையில் நீங்கள் என்னை எப்போதும் உங்கள் தோள்களில் சுமந்தீர்கள். நல்ல தருணங்களில், அடுத்த புள்ளியில் வெற்றி பெற நீங்கள் உதவினீர்கள், மோசமான தருணங்களில், சந்தேகத்திற்கு இடமின்றி, நான் தொடர்ந்து சண்டையிட என்னைத் தொடர்ந்து முன்னோக்கி தள்ளினீர்கள், உங்கள் அனைவருடனும் என்னால் வாழ முடிந்தது. உண்மையாக, உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக ஸ்பெயினில் இருந்து இவ்வளவு அன்பைப் பெறுவதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
உண்மை என்னவென்றால், இந்த மாதிரி இடத்திற்கு ஒருவரும் வர விரும்பவில்லை. நேர்மையாக, நான் டென்னிஸ் விளையாடுவதால் சோர்வடையவில்லை. என் உடல் இனி டென்னிஸ் விளையாட விரும்பாத நிலையை அடைந்துவிட்டது, எனவே நான் என் நிலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உண்மையிலேயே மிகவும் ஆசி பெற்ற நபராக உணர்கிறேன். எனது பொழுதுபோக்குகளில் ஒன்றை எனது தொழிலாக மாற்ற முடிந்தது, மேலும் நான் நினைத்ததை விட நீண்ட காலம். என்னுடன் இங்கு இருக்கும் அனைவருக்கும் நன்றி மற்றும் நன்றி மட்டுமே என்னால் முடியும், சிலர் இங்கு இல்லை, ஆனால் குறிப்பாக என் குடும்பம், சந்தேகத்திற்கு இடமின்றி நன்றி சொல்லி ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.