எப்போதும் டென்சனா? மன அழுத்தத்தை நிர்வகிக்க எளிதான வழிமுறைகள்!

Published by: ஜான்சி ராணி

வேலைப்பளு காரணமாக அன்றாடம் ஒரே மாதிரியான வேலைகள் சில நேரங்களில் மனச்சோர்வு ஏற்பட காரணமாக இருக்கும்.

அதை கவனிக்க வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

மன அழுத்தத்தை நிர்வகிப்பது என்பது ஒரு சில நாட்களில் செய்துவிடுவது அல்ல.

நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக செய்ய வேண்டி இருக்கும். இதில் சிறிய மாற்றங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

வேலைகளை செய்வதில் சிக்கல், கவனச்சிதறல், எரிச்சலுணர்வு, சோர்வடைதல் உள்ளிட்டவைகள் மன அழுத்தம் இருப்பதை காட்டுகிறது.

தினமும் செய்ய வேண்டிய வேலைகள் கடினமானதாக இருக்கும். மறதி, பதற்றம் ஆகியவை இருக்கும்.

மன அழுத்தம்

மன அழுத்தம் உடல்நல பாதிப்பை போன்றதுதான். இதை கவனத்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. எப்போதும் கவலையாக இருப்பதை தவிர்க்கலாம்.

வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள் மற்றும் படிப்புகளுக்கு இடையில், நாம் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறோம் எப்பதை கவனிக நேரம் இருக்காது.

பொழுதுபோக்குகள் உதவியாக இருக்கும். உங்களுக்குப் பிடித்த படம் பார்ப்பது, சினிமா தியேட்டர் செல்வது உள்ளிட்டவற்றை செய்யலாம்.

தினசரி அழுத்தங்களில் இருந்து தள்ளி இருக்க, கலை ஆர்வம் ஒரு சிறந்த வழி. இதுபோன்ற விஷயங்கள் உடலில் எண்டோர்பின்களை வெளியிட வைக்கிறது.

இது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, நம் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

மன, உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.

கார்டிசோல் ஹார்மோன் சீராக செயல்படும். இது மன அழுத்தத்தை குறைக்கிறது.

யோகா

யோகா பயிற்சியானது நம்மிடம் உள்ள பதற்றத்தை விடுவித்து, ஒட்டுமொத்தமாக நம் வாழ்வை மேம்படுத்துகிறது. மேலும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த கருவியாக அமைகிறது.

Blogging

பிளாகிங் மன அழுத்தத்தை நிர்வகிக்க மட்டுமல்ல, நம் வாழ்வை மேம்படுத்த உதவும் என்று சொல்லப்படுகிறது. நம் உணர்ச்சிகள், எண்ணங்களை வெளிப்படுத்த உதவும். இது மன அழுத்ததை நிர்வகிக்க உதவும்.

உரையாடல்

நமக்கு பிடித்த நபர்களுடன் சில நிமிடங்களைச் செலவழித்தால் போதும், எந்த நேரத்திலும் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தத்திற்கு நாம் சிக்கலான தீர்வுகளைத் தேடுகிறோம், ஆனால் சில சமயங்களில் நின்று, உட்கார்ந்து, சிலருடன் பேசுவதே சிறந்த பதிலாக அமைகிறது.

சின்ன சின்ன மாற்றங்கள் உங்கள் நன்னாளுக்கு வழியாக அமையும்.

மகிழ்ச்சியாக இருப்போம்!