மேலும் அறிய

மாரத்தான் போட்டியில் வென்ற திருநங்கை முதல்வரிடம் பரிசு வாங்க மறுப்பு - காரணம் என்ன?

புதுச்சேரி அரசு சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த திருநங்கை மாணவிக்கு பாலினத்தை காரணம் காட்டி பரிசு வழங்காமல் புறக்கணிப்பு.

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த திருநங்கை மாணவிக்கு பாலினத்தை காரணம் காட்டி பரிசு வழங்காமல் புறக்கணித்த விளையாட்டு துறையை கண்டித்து, தேசிய விளையாட்டு தினவிழாவில் திருநங்கைகள் முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கிய‌ சிறப்பு பரிசை திருநங்கை மாணவி வாங்க மறுத்ததால் அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக விழா மேடையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் தேசிய விளையாட்டு தினவிழா மற்றும் கேலோ புதுச்சேரி திருவிழா பரிசளிப்பு விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்தகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி‌ பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். 

இதனிடையே புதுச்சேரி அரசின் விளையாட்டு துறை சார்பில் கடந்த வாரம் 5 கி.மீ தூரத்திற்கு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் பிரிவில் லாஸ்பேட்டை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படித்து வரும், கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தியா என்ற திருங்கை மாணவி பங்கேற்றுள்ளார்.

பெண்கள் பிரிவில் பங்கேற்ற இவர் முதலிடம் பிடித்துள்ளார். ஆனால் பரிசளிப்பு விழாவில் தியாவுக்கு பரிசு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து திருநங்கை தியா விழா மேடையில் முதல்வர் அளித்த சிறப்பு பரிசை வாங்க மறுத்து முதலமைச்சரிடம் முறையிட்டார். அப்போது அதிகாரிகள் திருநங்கை மாணவியை விழா மேடையில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த திருநங்கை மாணவி தியா மற்றும் சக திருநங்கைகள் பரிசளிப்பு விழா முடிந்து வெளியே வந்த, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சரை முற்றுகையிட்டு முதலிடம் பிடித்த திருநங்கை தியாவுக்கு பாலினத்தை காரணம்காட்டி முதலிடம் பிடித்ததற்கான பரிசு வழங்காமல், சிறப்பு பரிசு மட்டும் வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர். அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருநங்கை தியா கூறுகையில், மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் திருநங்கைகளுக்கு விளையாட்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும், ஆனால் புதுச்சேரி அரசு எந்தவொரு இட ஒதுக்கீடும் தராமல் தங்களை வஞ்சிப்பதாகவும், இதனால் திருநங்கைகள் சமூதாயத்தில் முன்னேற முடியாத சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும் திருநங்கை தியா புதுச்சேரியில் ஆசிரியர் பயிற்சி பெறும் முதல் திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருநங்கை தியா தேசிய அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget