மேலும் அறிய

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் பரிதாபமான முறையில் ரன் அவுட்டானார்.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று இலங்கையின் காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது. 

கீழே விழுந்த ஜெய்ஸ்வால்:

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தொடங்கினர். பந்துவீச்சு ஒன்றும் பெரியளவில் எடுபடாத இந்த மைதானத்தில் இருவரும் சிறப்பாகவே ஆடினார்கள். குறிப்பாக, ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டி போல ஆடிக்கொண்டிருந்தார்.

அப்போது, கேஷரா நுவந்தா 11வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் கே.எல்.ராகுல் பந்தை ஒரு ரன்னுக்குத் தட்டிவிட்டு ஓட, பந்துவீச்சாளர் நுவந்தா பந்தைப் பிடிக்க முயற்சித்தபோது ஜெய்ஸ்வால் மீது மோதிவிட்டார். இதில் நிலைதடுமாறிய ஜெய்ஸ்வால் அங்கேயே கீழே விழுந்துவிட்டார்.

ரன் அவுட் பரிதாபம்:

அப்போது, ரன் எடுக்க பாதி வரை வந்த கே.எல்.ராகுல் மீண்டும் தனது ஸ்ட்ரைக்கிற்குச் செல்ல முயற்சித்தார். ஆனால், அதற்குள் ஃபீல்டர் பிரபாத் ஜெயசூர்யா பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிற்கு வீசினார். கீழே விழுந்து எழுந்து தடுமாறிய ஜெய்ஸ்வால் ரன் எடுக்க மறுமுனைக்குச் செல்ல முடியாமல் தனது கிரீசுக்கே திரும்பிவிட்டார். 

ஒரு நிமிடம் குழப்பத்தில் யோசித்த இலங்கை விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ரன் அவுட் செய்து அம்பயரிடம் அப்பீல் செய்தார். கே.எல்.ராகுல் ஜெய்ஸ்வாலுக்கு முன்பே கிரிசீல் பேட்டை வைத்துவிட்டதால் ஜெய்ஸ்வால் அவுட்டானார். அவர் 37 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்து பரிதாபமாக வெளியேறினார். அப்போது கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 14 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தார்.

துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகிய ஜெய்ஸ்வால் மிகுந்த விரக்தியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். மழை பெய்ததால் அவுட்ஃபீல்ட் மோசமாக இருப்பதால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 27 ஓவர்களில் 101 ரன்களுடன் ஆடி வருகிறது. கே.எல்.ராகுல் 37 ரன்களுடனும், படிக்கல் 35 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

இமாலய ரன்களை குவிக்குமா இந்தியா?

இலங்கை அணிக்காக பெர்னாண்டோ, லஹிரு குமாரா, நுவந்தா, பிரபாத் ஜெயசூர்யா, கேப்டன் டி சில்வா பந்துவீசியுள்ளனர். மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் மைதானம் என்பதால் இந்திய அணி இமாலய ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget