![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pro Kabaddi 2022: பரபரப்பான முதல் நாள் ஆட்டத்தில் மும்பையை பந்தாடிய நடப்புச் சாம்பியன் டெல்லி!
Pro Kabaddi 2022: நேற்று தொடங்கிய ப்ரோ கபடி போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மீண்டும் சாம்பியன் ஆட்டத்தை வெளிப்படுத்தி யு மும்பா அணியை வீழ்த்தி முதல் வெற்றியை தபாங் டெல்லி அணி பெற்றுள்ளது
![Pro Kabaddi 2022: பரபரப்பான முதல் நாள் ஆட்டத்தில் மும்பையை பந்தாடிய நடப்புச் சாம்பியன் டெல்லி! Pro Kabaddi 2022: UP Yoddhas beat Jaipur Pink Panthers 34-32 in a last-minute thriller Pro Kabaddi 2022: பரபரப்பான முதல் நாள் ஆட்டத்தில் மும்பையை பந்தாடிய நடப்புச் சாம்பியன் டெல்லி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/08/d8a85dbfbcc9150c9665e8a53174cb361665191903762224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Pro Kabaddi 2022: இந்திய கபடி ரசிகர்களுக்கு பெரிய விருந்து அளிக்கும் ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் நேற்று தொடங்கியது. 12 அணிகள் களமிறங்கிய இந்தத் தொடர் நேற்று முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் முதல் நாளான நேற்று மூன்று போட்டிகள் நடைபெற்றன. அதில் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் தபாங் டெல்லி யு மும்பா அணியை எதிர்த்து 7.30 மணிக்கு விளையாடிது. அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இரவு 8.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மூன்றாவது போட்டியில் முதல் சீசன் சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணி உபி யோதா அணியை எதிர்த்து இரவு 9.30 மணிக்கு விளையாடியது.
தபாங் டெல்லி VS யு மும்பா
இநத சீசனின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் தபாங் டெல்லி அணி வீரர்கள், யு மும்பா அணி வீரர்களை பந்தாடியதோடு மட்டும் இல்லாமல், இந்த முறையும் நாங்கள் தான் சாம்பியன் எனும் அளவிற்கு யு மும்பா அணியை வீழ்த்தி மீண்டும் ஒரு முறை சாம்பியன் ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். 41 - 27 புள்ளிகள் எனும் கணக்கில் தபாங் டெல்லி அணி, யு மும்பா அணியை ஊதித் தள்ளினர்.
View this post on Instagram
பெங்களூரு புல்ஸ் VS தெலுங்கு டைட்டன்ஸ்
இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்த்து களம் இறங்கியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பெங்களூரு அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 34 - 29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.
ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் VS உபி யோதா
இந்த சீசனின் முதல் நாளின் மூன்றாவது ஆட்டத்தில் இரவு 9.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. ஆரம்பம் முதலே அனல் பறந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியும் உபி யோதா அணியும் ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை யார் வெற்றி பெருவார்கள் என பரபரப்பை கூட்டிக் கொண்டே சென்றனர். இறுதியில் ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியை உபி யோதா அணி 34 - 32 எனும் புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தியது.
The Yoddhas sneaked past the Panthers in an absolute nail-biter 🎬#vivoProKabaddi fans, 𝘩𝘰𝘸'𝘴 𝘵𝘩𝘢𝘵 𝘧𝘰𝘳 𝘢 #𝘍𝘢𝘯𝘵𝘢𝘴𝘵𝘪𝘤𝘗𝘢𝘯𝘨𝘢?#JPPvUP pic.twitter.com/DBgfV8wTxJ
— ProKabaddi (@ProKabaddi) October 7, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)