பிரக்ஞானந்தா, நந்திதா வெற்றி; குகேஷ் தோல்வி: நாளை கடைசி நாள் வாய்ப்பு என்ன?
செஸ் ஒலிம்பியாட் போட்டி 10 வது சுற்றுப்போட்டி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் இன்று வெற்றி அடைந்தது. இந்திய மகளிர் ஏ அணி கஜகஸ்தான் அணியை 3.5- 0.5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்திய மகளிர் பி அணி நெதர்லாந்து அணியையும் மற்றும் இந்திய மகளிர் சி அணி ஸ்வீடன் அணியை வென்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் இதுவரை பதக்கமே வாங்காமல் இருந்த இந்திய மகளிர் அணி நாளை தங்க பதக்கத்தை வெல்ல வாய்ப்புள்ளது. புள்ளி பட்டியலில் இந்திய A மகளிர் அணி முதல் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்புடத்தக்கது . தமிழ்நாட்டை சேர்ந்த நந்திதா வெற்றி பெற்றுள்ளார்.
10வது ரவுண்ட் முடிவுகள்
இந்தியா B - உஸ்பெகிஸ்தான்
குகேஷ் டி -- வெற்றி
சரின் நிஹால் -- சமன்
பிரக்ஞானந்தா ஆர் -- வெற்றி
அதிபன் பி -- சமம்
இந்தியா A
ஹரிகிருஷ்ணா -- தோல்வி
விதித் சந்தோஷ் குஜராத்தி -- வெற்றி
எரிகைசி அர்ஜுன் -- சமன்
நாராயணன் எஸ்.எல் -- வெற்றி
இந்தியா 3 - ஸ்லோவாக்கியா
கங்குலி சூர்யா சேகர் -- சமன்
சேதுராமன் எஸ்.பி -- தோல்வி
கார்த்திகேயன் முரளி -- சமன்
பூரணிக் அபிமன்யு -- வெற்றி
வெற்றி விவரம்
தற்போது 10வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் அணியுடன் இந்திய பி அணி மோதியது. இதில் குகேஷ், நோடிர்பெக் என்ற வீரருடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குகேஷ், 72வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். இதே போன்று நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா சிண்டாரோவ் என்ற வீரருடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 77வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றியை பெற்றார். இதே போன்று மற்ற 2 வீரர்களான நிஹல் மற்றும் அந்திபன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் இரு அணிகளும் தலா 2 புள்ளிகளை பெற்று சமனில் முடிந்தது. இதே போன்று ஈரான் அணியுடன் இந்தியா ஏ மோதியது. இதில் இரண்டு அணிகளும் தலா 2 புள்ளிகளை பெற்று சமனில் முடிவடைந்தது.
இதே போன்று இந்திய சி அணி ஸ்லோவாக்கியாவுடன் மோதியது. இதில் களமிறங்கிய மற்றொரு தமிழக வீரர் சேதுராமன் தோல்வியை தழுவினார். மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியில் களமிறங்கிய தமிழக வீராங்கனை வைசாலி கஜகஸ்தான் வீராங்கனையுடன் டிரா செய்ய, மற்ற மூவரும் வெற்றி பெற்றனர். இதே போன்று நெதர்லாந்து அணியை இந்திய பி அணி வீழ்த்தியது. சுவிடனை எதிர்கொண்ட இந்திய சி அணியும் வென்றது. இதில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்