மேலும் அறிய

Pele Death: மறைந்தது கால்பந்தின் ’கருப்பு முத்து’ .. மூன்று முறை உலகக்கோப்பையை முத்தமிட்ட பீலே காலமானார்..!

எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 வயதில் காலமானார்.

கால்பந்து பற்றி ஒரு அணு அளவு கூட தெரியாத நபர்களிடம் கால்பந்து பற்றி கேட்டால், அவர்கள் உச்சரிக்கும் வீரர்களில் மெஸ்ஸியும், ரொனால்டோவும் இருப்பர். இந்த இரு வீரர்கள் கால்பந்தை கடந்து உலகம் முழுவதும் அவ்வளவு புகழ் பெற்றவர்கள்.

இவர்கள் இருவருக்கும் முன்னதாகவே, தலைவனுக்கு தலைவனாக இருந்தவர்தான் பீலே. எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 வயதில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் நேற்று இரவு தெரிவித்தனர். 

இதுகுறித்து பீலே மகள் கெலி நாசிமெண்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எங்களுக்கு அனைத்தையும் கொடுத்த உங்களுக்கு நன்றி, உங்களை எல்லையில்லாமல் நேசிக்கிறோம். நிம்மதியாக இருங்கள்" என பதிவிட்டு இருந்தார். 

சிகிச்சை:

கடந்த செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் இருந்து கட்டி அகற்றப்பட்டதிலிருந்து பீலே தொடர்ந்து கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டார். அதேபோல், கடந்த 2012 ஆம் ஆண்டு தோல்வியுற்ற இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு உதவியின்றி நடப்பதில் சிரமம் இருந்தது. பிப்ரவரி 2020 இல், கொரோனா வைரஸ் தொற்றுநோய் கண்டறியப்பட்டது. 

வாழ்க்கை குறிப்பு:

எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ என்ற இயற்பெயர் கொண்ட பீலே, 1957 ஆம் ஆண்டு ஜூலை 7ம்தேதி மராகனா நகரில் நடந்த சர்வதேச கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக பீலே பிரேசில் அணியில் முதன்முதலாக அறிமுகமாகி தனது 16 வயதிலேயே முதல் கோலை பதிவு செய்தார்.

1958 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார்.இதன்மூலம் இளம் வயதில் உலகக் கோப்பையை வென்அ ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 

தொடர்ந்து 1962, 1970 களில் பிரேசில் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பீலே. இதையடுத்து மூன்று முறை உலகக் கோப்பை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற மிகப்பெரிய பிம்பம் பீலேவுக்கு கிடைத்தது. தற்போது வரை இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. 

பீலே பிரேசிலுக்காக 92 போட்டிகளில் 77 கோல்கள் உட்பட, தனது 21 ஆண்டுகால வாழ்க்கையில் 1,363 போட்டிகளில் 1,281 கோல்களை அடித்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார். 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் சாண்டோஸ் ஹீரோ ஆவார்.

2000 ஆம் ஆண்டில், பீலே அவர்களின் நூற்றாண்டின் சிறந்த வீரராக ஃபிஃபாவால் அறிவிக்கப்பட்டார். பிரேசிலுக்காக 77 கோல்களை அடித்து  அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பீலே விளையாடிய காலத்தில் அவர்தான் அதிக சம்பளம் பெற்ற ஒரே விளையாட்டு வீரராக இருந்தவர். கடந்த 1977 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பீலே, தற்போது வரை பல கால்பந்து வீரர்களுக்கு ஐகானாக திகழ்ந்து வருகிறார். 

திருமண வாழ்க்கை:

கருப்பு முத்து, ஃபிஃபாவால் 'தி கிரேட்டஸ்ட்' என்றும் அழைக்கப்படும் பிரேசிலிய கால்பந்து வீரர் பீலே, மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Embed widget