Paris Olympics : ஒலிம்பிக்கில் இன்று இந்தியாவிற்கு என்னென்ன போட்டிகள்? எத்தனை மணிக்கு நடக்குது?
பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் என்னென்ன? பங்கேற்பவது யார்? என்று கீழே விரிவாக காணலாம்.
உலகின் மிகப்பெரிய மற்றும் பாரம்பரியமான விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் பாரிஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பாரிஸ் நகரில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் என்னென்ன? எத்தனை மணிக்கு என்பதை கீழே விரிவாக காணலாம்.
துப்பாக்கிச்சுடுதல்:
மதியம் 12 மணிக்கு நடைபெறும் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால், அர்ஜூன் பபுதா, இளவேனில், சந்தீப்சிங் பங்கேற்கின்றனர்.
படகுப்போட்டி:
மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் படகுப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பல்ராஜ் பன்வார் பங்கேற்கிறார்
துப்பாக்கிச்சுடுதல்:
- ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்றுப் போட்டியில் அர்ஜூன் சிங் சீமா, சரப்ஜோத் சிங் பங்கேற்கின்றனர். இவர்கள் மதியம் 2 மணிக்கு நடக்கும் போட்டியில் பங்கேற்கின்றனர்.
- மதியம் 2 மணிக்கு நடக்கும் தங்கம், வௌ்ளிக்கான மோதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவினர் மோதும் போட்டி நடக்கிறது.
- மாலை 4 மணிக்கு நடக்கும் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச்சுற்று போட்டியில் மனுபகேர் மற்றும் ரிதம் சங்க்வான் போட்டியிடுகின்றனர்.
டென்னிஸ்:
ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஸ்ரீராம் பாலாஜி/ ரோகண் போபண்ணா பிரான்ஸ் நாட்டின் பேபியன் ரிபோல்/ரோஜரை எதிர்த்து போட்டியிடுகின்றனர். இது மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது.
பேட்மிண்டன்:
- ஆடவர் ஒற்றையர் பிரிவில் குழு ஆட்டத்தில் லக்ஷயா சென் 7.10 மணிக்கு மேலே கெவின் கார்டனுடன் மோதுகிறார்.
- 8 மணிக்கு மேலே ஆடவர் இரட்டையர் பிரிவில் குழு ஆட்டத்தில் சத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி பிரான்ஸ் நாட்டின் லூகாஸ்/ ரோனானுடன் மோதுகின்றனர்.
- 50 மணிக்கு மேலே மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி/ தனிஷா ஜோடி தென்கொரியாவின் கிம்சோ/ கோங் ஹீ ஜோடியுடன் மோதுகிறது.
டேபிள் டென்னிஸ்:
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இரவு 7.15 மணிக்கு ஹர்மீத் தேசாய் ஜோர்டான் நாட்டு வீரர் அபோ யமனுடன் மோதுகிறார்.
ஹாக்கி:
இரவு 9 மணிக்கு ஹாக்கி ஆடவர் பிரிவில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
குத்துச்சண்டை:
மகளிர் 54 கிலோ கிராம் பிரிவில் நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவின் ப்ரீதி பவார் வியட்னாமின் தி கிம்-வுடன் மோதுகிறார்.