ENG vs NZ WC 2023: ஒருநாள் கிரிக்கெட் போட்டி; புதிய வரலாறு படைத்த இங்கிலாந்து - ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
கிரிக்கெட் வரலாற்றில் இன்றைய போட்டியில் மற்றொரு சாதனையும் அரங்கேறியுள்ளது. அது, இங்கிலாந்து அணியின் அனைத்து வீரர்களும் இரட்டை இலக்க எண்களில் ரன் அடித்தது தான்.

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் இன்று (அக்டோபர் 5) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதனமான ‘நரேந்திர மோடி மைதனத்தில்’ நடந்தது. இச்சூழலில், 48 லீக் ஆட்டங்களை கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது. இதில் முதல் லீக் போட்டியான இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினர். அதில், ஜோ ரூட் இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் அரைசதத்தை அடித்து சாதனை படைத்தார்.
மற்றொரு சாதனை:
அதே நேரம் கிரிக்கெட் வரலாற்றில் இன்றைய போட்டியில் மற்றொரு சாதனையும் அரங்கேறியுள்ளது. அது, இங்கிலாந்து அணியின் அனைத்து வீரர்களும் இரட்டை இலக்க எண்களில் ரன் அடித்தது தான்.
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற மொத்த ஒரு நாள் போட்டிகள் மொத்தம் 4 ஆயிரத்து 658 . அதில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் தான் இப்படி ஒரு சாதனை அரங்கேறியிருக்கிறது.
இரட்டை இலக்க ரன்கள்:
ஜானி பார்ஸ்டோ 33
டேவிட் மாலன் 14
ஜோ ரூட் 77
ஹாரி ப்ரூக் 25
மொய்ன் அலி 11
ஜோஸ் பட்லர் 43
லியம் லிவிங்ஸ்டன் 20
சாம் கரண் 14
கிரிஸ் வோய்கெஸ் 11
ஆடில் ரசித் 15
மார்க் உட் 13 ரன்கள் எடுத்துள்ளனர். இதுதான் தற்போது சமூகவலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்துள்ளது.
283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் யார் இந்த உலகக்கோப்பையின் முதல் வெற்றியை சுவைக்கப் போகின்றனர் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
4,658 ODI matches in history so far.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 5, 2023
First time ever all the 11 batters of a team scored runs in double digits. pic.twitter.com/UYP1oWDf0S
மேலும் படிக்க: India Cricket: இந்தியாவில் முதன்முதலில் கிரிக்கெட் விளையாடியது எங்கு தெரியுமா? 300 ஆண்டு கால வரலாறு..!
மேலும் படிக்க: Devon Conway Century:உலகக்கோப்பை அறிமுக போட்டியிலே அபார சதம்.. இங்கிலாந்தை மிரட்டிய கான்வே!





















