WTC Finals: IND vs NZ: நியூசிலாந்துக்கு 139 ரன்கள் இலக்கு...!
இன்று வீசப்பட்ட 73 ஓவர்களை எதிர்கொண்ட இந்திய அணியை, 249 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல்-அவுட் செய்தது. அடுத்து களமிறங்கும் நியூசிலாந்து அணி 139 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் மழையால் கைவிடப்பட, இரண்டாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் பாதியிலேயே தடைபட, மூன்றாவது நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியிருந்தது. நான்காவது நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால், ஒரு பந்துகூட வீசமுடியாத சூழலில் ஆட்டம் கைவிடப்பட்டது.
ஐந்தாவது நாள் மட்டும் விறுவிறுப்பாக இருந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி, 32 ரன்கள் முன்னிலை பெற்று களத்தில் இருந்தது. நேற்றே முக்கியமான இரண்டு விக்கெட்டுகளையும் இழந்திருந்த இந்திய அணிக்கு, இன்றைய ரிசர்வ் நாள் ஆட்டமும் சொதப்பலாகவே தொடங்கியது.
ALL OUT ☝️
— ICC (@ICC) June 23, 2021
The 🎯 is set for the @BLACKCAPS! #WTC21 Final | #INDvNZ | https://t.co/AKyfpKI3ag pic.twitter.com/gRWvTjXoAu
இன்று வீசப்பட்ட 73 ஓவர்களை எதிர்கொண்ட இந்திய அணியை, 249 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல்-அவுட் செய்தது. அடுத்து களமிறங்கும் நியூசிலாந்து அணி 139 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். இன்னும் 53 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில், 139 ரன் இலக்கை நியூசிலாந்து எட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அதுமட்டுமின்றி, போட்டி நடைபெற இருக்கும் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு என வெதர் மேன் பதிவிட்டுள்ளார். மழை பெய்யாதபட்சத்தில் ஓவர்கள் வீசப்படும். இலக்கைவிட பந்துகள் அதிகம் இருப்பதால், நியூசிலாந்து அணி போட்டியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
139 to win in 53 overs for NZ and innaikinu paathu, its so clear and bright in Southampton and bad light chances also looks dim.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) June 23, 2021
Taking early wickets is the only way out for India. pic.twitter.com/36iGGhFDFi
இந்தியா வெற்றி பெற வேண்டுமெனால், நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆவதற்குள் இந்திய பெளலர்கள் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும்.
முன்னதாக இந்திய அணி விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸில், ஜாமிசன் வீசிய துல்லிய பந்துகளால் கோலி, புஜாரா என இரண்டு முக்கிய விக்கெட்டுகள் போட்டியின் தொடக்கத்திலேயே சரிந்தன. இது இந்திய அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துணை கேப்டன் ரஹானேவும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். முதல் இன்னிங்ஸில் சொதப்பியது போல, இந்த இன்னிங்ஸ்லையும் தவறான ஷாட் விளையாட நினைத்து முக்கியமான நேரத்தில் அவுட்டாகியுள்ளார்.
ரிசர்வ் நாள் போட்டி தொடங்கிய முதல் செஷனில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளதால், களத்தில் இருக்கும் வீரர்கள் பார்ட்னெர்ஷிப் அமைத்து விளையாடுவது மிக முக்கியமானதாக இருந்தது. ஆனால், ரிஷப் பண்ட் மட்டும் களத்தில் இருந்து 41 ரன்கள் எடுத்தார்.