Asian Championship Final: ஆசிய குத்துசண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மேரி கோம், சாக்ஷி!
மேரி கோம் 4-1, சாக்ஷி 3-2 என்ற கணக்கில் ஆசிய சாம்பியன்ஷிப் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேற்றமடைந்துள்ளனர்
6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேரி கோம் (51 கிலோ) மற்றும் சாக்ஷி சவுத்திரி (54 கிலோ) ஆகியோர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளனர்.
𝗠𝗔𝗚𝗡𝗜𝗙𝗜𝗖𝗘𝗡𝗧 𝗠𝗔𝗥𝗬 🤩@MangteC puts up a Kom-manding show to enter the Finals of the 2021 ASBC Asian Elite Boxing Championships in Dubai. She defeated 🇲🇳's Lutasaikhan A by 4️⃣-1️⃣ 🥊#PunchMeinHaiDum#AsianEliteBoxingChampionships#GoForGold pic.twitter.com/iXu7GcbL8K
— Boxing Federation (@BFI_official) May 27, 2021
துபாயில் ஆசிய குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது, அதில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் மேரி கோம் 4-1 என்ற கணக்கில் மங்கோலிய வீராங்கனையான லுட்சைகான் அல்டன்ட்சேட்செக்-கை வீழ்த்தினார். குறிப்பாக இந்திய முன்னணி வீராங்கனை மேரி கோம் கவுண்டர் அட்டாக் செய்து அல்டன்ட்சேட்செக் வீழ்த்திய விதம் அவரின் அனுபவத்தை பளிச்சிட செய்தது.
அதே நேரம் இரண்டு முறை இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப்பை வெற்றி பெற்றுள்ள இந்திய வீராங்கனை சாக்ஷி 3-2 என்ற கணக்கில் கசாக் வீராங்கனை தினா சோலமான் வீழ்த்தினார். முக்கியமான தருணங்களில் சாக்ஷி சிறப்பாக செயல்பட்டது மூலியமாக இந்த வெற்றி உறுதியானது.
𝐒𝐔𝐏𝐄𝐑𝐁 𝐒𝐀𝐊𝐒𝐇𝐈 🥳#Sakshi continues her winning streak to enter the Finals of 2021 ASBC Asian Elite Boxing Championships. She beat top seed Dina Z of 🇰🇿 in SF bout by split decision 🥊#PunchMeinHaiDum#AsianEliteBoxingChampionships#GoForGold pic.twitter.com/zFrHoysOAJ
— Boxing Federation (@BFI_official) May 27, 2021
இந்திய ஆடவர் அணியை சேர்ந்த அமித் பாங்கள் (52 கிலோ ), வரிந்தர் சிங் (60 கிலோ), ஷிவ தாபா ( 64 கிலோ ), விகாஸ் க்ரிஷன் (69 கிலோ), சஞ்சீத் (91 கிலோ) ஆகியோர் அரை இறுதியில் நாளை மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.