Karur: முதலமைச்சர் கோப்பை: கரூர் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு டி-சர்ட் வழங்கி ஆட்சியர் வாழ்த்து
உங்கள் பெற்றோர்களுக்கும், கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் - கரூர் மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆட்சியர் பிரபுசங்கர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகளில், கரூர் மாவட்டத்திலிருந்து கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள், வீராங்னைகளுக்கு டி ஷர்ட் வழங்கி , வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும், மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 30.06.2023 முதல் 25.07.2023 வரை துவங்கி நடைபெறுவதையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தலைமையில் (30.06.2023) தொடங்கி வைத்து நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போட்டிகளில் மாவட்ட அளவில் பல்வேறு அணிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள், கரூர் மாவட்டத்திலிருந்து பள்ளிப் பிரிவு, கல்லூரி பிரிவுகளில் உள்ள விளையாட்டு வீரர்கள் கையுந்துபந்து, கபடி மற்றும் சிலம்பம் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இதில் ஜவர்கலால் நேரு விளையாட்டு அரங்கிலும், மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில், பள்ளிப் பிரிவில் கையுந்து பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கலந்து கொள்ளும் 12 வீரர்களும், கையுந்து பந்து போட்டியில் மகளிர் பிரிவில் கலந்து கொள்ளும் 12 வீரர்களும், இவர்களுடன் 1 ஆண் மற்றும் 1 பெண் அணி மேலாளர்களும், ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கிலும், நேரு பார்க் விளையாட்டு வளாகத்தில், கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் கலந்து கொள்ளும் 12 வீரர்களும், கபடி போட்டியில் மகளிர் பிரிவில் கலந்து கொள்ளும் 12 வீரர்களும், இவர்களுடன் 1 ஆண் மற்றும் 1 பெண் அணி மேலாளர்களும், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், சிலம்பம் போட்டியில் பள்ளி சேர்ந்த ஆண்கள் பிரிவில் கலந்து கொள்ளும் 5 வீரர்களும், சிலம்பம் போட்டியில் மகளிர் பிரிவில் கலந்து கொள்ளும் 5 வீரர்களும், அதேபோல் சிலம்பம் போட்டியில் கல்லூரியைச் சேர்ந்த ஆண்கள் பிரிவில் கலந்து கொள்ளும் 4 வீரர்களும், சிலம்பம் போட்டியில் மகளிர் பிரிவில் கலந்து கொள்ளும் 1 வீரரும், இவர்களுடன் 2 ஆண் மற்றும் 2 பெண் அணி மேலாளர்களும் ஆக மொத்தம் 71 வீரர்கள் கலந்துகொள்ள செல்கின்றனர்.

மாவட்ட அளவில் பல்வேறு அணிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கரூர் மாவட்ட சார்பில் கலந்து கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. விளையாட்டு வீரர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் இந்தப் பயணத்தை மகிழ்ச்சியாகவும் சிறப்பாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று உங்களுக்கும், உங்கள் பெற்றோர்களுக்கும், கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் ச.உமாசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/





















