Junior National Aquatic Championship: தேசிய நீச்சல் போட்டிகளில் 3 நாட்களில் 3 புதிய சாதனை.. மாஸ் காட்டிய மகாராஷ்டிரா வீராங்கனை!
தேசிய ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் அபெக்ஷா 3 புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.
தேசிய ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் பிரிவில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அபெக்ஷா ஃபெர்ணாண்டஸ் 3 தேசிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார். 3 நாட்களில் 3 பிரிவில் இந்தத் தேசிய சாதனையை படைத்துள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த அபெக்ஷா ஃபெர்ணாண்டஸ் இவர் பெண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோர்க், 100 மீட்டர் பட்டர்ஃபிளை மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோர்க் ஆகிய பிரிவுகளில் பங்கேற்றார். இந்த மூன்று பிரிவுகளிலும் அபெக்ஷா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அத்துடன் இந்த 3 பிரிவுகளிலும் புதிய தேசிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
New National Record
— Sports India (@SportsIndia3) July 18, 2022
👉Apeksha creates 3rd National record , this time in 100m Butterfly at Junior National championship
👉 She clocks 1:01.94 in final to win gold with New NR timing
👉 Old National Record - 1:02.71 (Astha Choudhury)
🇮🇳 pic.twitter.com/7IHOEVbwU0
50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோர்க் பிரிவில் அபெக்ஷா பந்தய தூரத்தை 33.49 விநாடிகளில் கடந்து புதிய ஜூனியர் பிரிவு தேசிய சாதனையை படைத்தார். அடுத்ததாக 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோர்க் பிரிவில் பந்தய தூரத்தை 1.12.83 என்ற நேரத்தில் நீந்தி புதிய சாதனையை படைத்தார்.
கடைசியாக நேற்று நடைபெற்ற 100 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் பந்தய தூரத்தை 1.01.94 என்ற நேரத்தில் நீந்தி புதிய ஜூனியர் தேசிய சாதனையை படைத்தார். இந்தப் பிரிவில் கடந்த ஆண்டு அஸ்தா சௌதரி 1.02.71 என்று படைத்திருந்த சாதனையை அபெக்ஷா தற்போது உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் மாதவன் 100 மீட்டர் ஃப்ரீஸ்டையில் பிரிவில் பந்தய தூரத்தை 52.12 விநாடிகள் என்ற நேரத்தில் நீந்தி கடந்து தங்கப்பதக்கம் வென்று இருந்தார். தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட அணிகள் மாறி மாறி பதக்கங்களை வென்று வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்