'இது என்னடா நமக்கு வந்த சோதனை' - ரசிகரின் சட்டைக்குள் புகுந்த கோல்ஃப் பந்து!
அமெரிக்கா நியூ ஜெர்ஸி நார்தன் டிரெஸ்ட் பார்வையாளரின் சட்டைக்குள் கோல்ஃப் பந்தை வீரர் ஒருவர் அடித்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரில் நார்தன் டிரஸ்ட் கோல்ஃப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் நேற்று இரண்டாவது சுற்று போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிடிகி மட்ஸ்யுமா 10ஆவது குழியில் கோல்ஃப் பந்தை போட முயற்சி எடுத்தார்.
அந்த சமயத்தில் அவர் அடித்த பந்து மைதானத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த நபரின் சட்டைக்குள் சென்றது. யாரும் எதிர்பாராத விதமாக அப்படி பந்து கீழே குத்தி பவுன்ஸ் ஆகி அந்த நபரின் சட்டைக்குள் சென்றது. பின்பு மட்ஸ்யுமா வந்து பந்தை எடுக்கும் வரை அந்த நபர் அங்கேயே நின்றார். அங்கு வந்த மட்ஸ்யுமா பந்தை அவரிடம் இருந்து பெற்று. அவர் நின்ற இடத்தை அடுத்த ஷாட்டிற்கு மார்க் செய்து கொண்டார். அத்துடன் அந்தப் பந்தில் தன்னுடைய கையெழுத்தை இட்டு அந்த நபருக்கு கோல்ஃப் பந்தை திருப்பி கொடுத்தார்.
A wayward drive into … a guy’s SHIRT?! 😂 pic.twitter.com/ggFebWnHT8
— PGA TOUR (@PGATOUR) August 20, 2021
இந்தச் சம்பவத்தை பிஜிஏ கோல்ஃப் டூர் ட்விட்டர் பக்கம் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவை தற்போது வரை 1.5 மில்லியன் பெருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த சம்பவம் தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் பலரும் ஆச்சரியமாக உள்ளனர். இந்த வீடியோ பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுபோன்று கோல்ஃப் விளையாட்டில் சில சம்பவங்கள் நடக்கும் போது அது மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துவிடுகிறது.
Shades of @McIlroyRory's pocket drive.
— PGA TOUR (@PGATOUR) August 20, 2021
Only golf. 🙃 #TOURVault pic.twitter.com/hivOfRQWcY
கோல்ஃப் விளையாட்டில் இதுபோன்று நடப்பது புதிதல்ல. இதற்கு முன்பாக ஒரு மெக்ல்லோரி அடித்த கோல்ஃப் பந்து இதேபோன்று ஒருவரின் பேண்ட் பைக்குள் சென்றது. அப்போது அந்த நபரிடம் மெக்ல்லோரி பந்தை பெற்று தன்னுடைய அடுத்த ஷாட்டை அடிப்பார். இந்த வீடியோவையும் தற்போது பிஜிஏ கோல்ஃப் டூர் பக்கம் பதிவிட்டு நினைவு கூர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் : 5 பதக்கங்களுடன் டாப் 3 இடம்பிடித்த இந்திய மகளிர் அணி..!