Jake Paul beats Mike Tyson : இப்படி ஒரு சம்பவமா! மைக் டைசனை துவம்சம் செய்த ஜேக் பால்
Jake Paul vs Mike Tyson : முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசனை தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஜேக் பால் தோற்கடித்தார்
டெக்சாஸில் நடந்த சர்வதேச ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மைக் டைசன் vs ஜேக் பால்:
முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் மற்றும் பிரபல யூ டியுபராக இருந்து தொழில்முறை குத்துச்சண்டை வீரரான ஜேக் பாலுடம் மைக் டைசன் மோதினார்.
இந்த போட்டியானது அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆர்லிங்டன் ஏடி அண்ட் ஏடி விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற நிலையில் இந்த போட்டிக்கான மொத்தம் டிக்கெட்டும் விற்று தீர்ந்தது.இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஜேக் பால் மைக் டைசனிடம் ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக எட்டாவது சுற்றில் மைக் டைசன் பாலை ஒரே ஒரு முறை மட்டும் பஞ்ச் செய்தார்.
Jake Paul and Mike Tyson at the end of 8 rounds. #PaulTyson pic.twitter.com/YFdcUrkPZk
— Netflix (@netflix) November 16, 2024
பால் தனது அதிவேக அசைவுகளை பயன்படுத்தி வயதான டைசனை எளிதாக ஆதிக்கம் செலுத்தினார், மேலும் மூன்றாவது சுற்றில் அடுத்தடுத்த பஞ்ச்களை குத்துகளை வீசிய பிறகு முன்னாள் மறுக்க முடியாத ஹெவிவெயிட் சாம்பியனை மீள முடியவில்லை.
வீழ்ந்த டைசன்:
இறுதியில் ஜேக் பால் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை நல்ல புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இருப்பினும், இந்த தோல்விக்கு யாரும் மைக் டைசனை குறை கூறவில்லை, ஏனெனில் மைக் டைசன் உச்சத்தில் இருக்கும் போது அவரைப் பார்த்தவர்களுக்கு தெரியும் டைசன் யாரென்று, அப்போது ஜேக் பால் அவரை அப்போது சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது அவரது தீவிர ரசிகர்களுக்கு தெரியும்.
பரிசுத் தொகை எவ்வளவு?:
ஜேக் பாலுக்கு எதிரான போட் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனுக்கு சுமார் $20 மில்லியன் டாலர் சம்பளமாக, 58 வயதாகும் மைக் டைசனுக்கு இந்த வயதில் எந்த குத்துச்சண்டை வீரருக்கும் கிடைக்காத சம்பள பணத்தை வாரி வழங்கியுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற ஜேக் பாலுக்கு 40 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
டைசனுக்கு ஜேக் பால் புகழாரம்:
என்ன தான் மைக் டைசனை ஜேக் பால் வீழ்த்தி இருந்தாலும் அவர் ஒரு ஜாம்பாவன், அவருக்கு எதிராக நான் சண்டையிட்டது எனக்கு மிக பெருமையாக உள்ளது. இன்று நான் இங்கு இருப்பதற்கு காரணம் அவர் தான், அவர் தான் எனது முன்னுதாரணம். அவரை போல ஒரு வலிமையான மனிதரை நான் பார்த்ததில்லை என்று மைக் டைசனுக்கு ஜேக் பால் பாராட்டு மழை பொழிந்தார்.
Jake Paul praises Mike Tyson: "He's the GOAT" #PaulTyson pic.twitter.com/AhEBA5Ojoj
— Netflix (@netflix) November 16, 2024