Yash thakur: 2024 ஐபிஎல் தொடரின் பந்து வீச்சில் யஷ் தாகூர் படைத்த அடடா சாதனை!
Yash thakur: 2024 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து யஷ் தாகூர் சாதனை படைத்துள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து லக்னோ வீரர் யஷ் தாகூர் சாதனை படைத்துள்ளார்.
யஷ் தாகூர் சாதனை:
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்றைய போட்டியில் சாதனையை படைத்துள்ளார் 25 வயதான இளைஞர் யஷ் தாகூர். நேற்று முன் தினம் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. அப்போட்டியில் 30 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்த வருடத்துக்கான ஐபிஎல் தொடரின் அதிகபட்ச விக்கெட் எடுத்தவர் என்னும் சாதனையை படைத்தார் யஷ் தாகூர். இதற்கு முன்பு சிஎஸ்கே அணியைச் சேர்ந்த முஸ்தவிசுர் ரகுமான் 4 விக்கெட் எடுத்ததே இந்த தொடரின் அதிகபட்சமாக இருந்தது. இந்நிலையில், அந்த சாதனையை தகர்த்து, லக்னோ வீரர் யஷ் தாகூர் புது சாதனையை படைத்தார். இந்நிலையில், 2024 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், இதுவரை அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் நம்பர் 1 இடத்தை பிடித்தார் யஷ். இவரின் சாதனையை பலரும் புகழ்ந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் - லக்னோ:
ஐ.பி.எல். தொடரில் லக்னோ மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், லக்னோ அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் அணி.
80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து குஜராத் தடுமாறியது. கடைசி 18 பந்துகளில் குஜராத் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது, விஜய் சங்கர் – ராகுல் திவேதியா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாகவும், ஏதுவான பந்துகளை அடித்தும் ஆடினர்.
கடைசி 6 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 72 ரன்கள் தேவைப்பட்டது. விஜய் சங்கர் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார். அடுத்து வந்த ரஷீத்கான் அடித்து ஆட நினைத்து டக் அவுட்டானார். 7 விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் குஜராத்தை விட்டு சென்றது.
வெற்றிக்கு உதவிய யஷ்:
கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட முயற்சித்த ராகுல் திவேதியா யஷ் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசியில் 18.5 ஓவர்களில் குஜராத் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லக்னோ அணியில் யஷ் தாகூர் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணி வெற்றி பெற பெரிதும் உதவினார்.
Also Read: CSK vs KKR LIVE Score: ஜடேஜா - தேஷ் பாண்டே அசத்தல் பந்து வீச்சு; சென்னைக்கு 138 ரன்கள் இலக்கு!