CSK vs KKR LIVE Score: கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
IPL 2024 CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.

Background
IPL 2024 CSK vs KKR
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று (ஏப்ரல் 8) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றன.
நேருக்கு நேர்
சி.எஸ்.கே இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வென்று, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்ற சென்னை அணி, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், கொல்கத்தா அணியோ விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலும் வென்று முதலிடத்திற்கு முன்னேற தீவிரமாக உள்ளது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் சென்னை அணி அதிகபட்சமாக 225 ரன்களையும், குறைந்தபட்சமாக 114 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், சென்னை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்தபட்சமாக 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
CSK vs KKR LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!
15 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.




















