MI-W vs DC-W, 1 Innings Highlight: மகளிர் ஐ.பி.எல்: மும்பையை அள்ளி வாரிய டெல்லி...முதலிடம் பிடித்து அசத்தல்..!
அடுத்த சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய இரண்டாவது ஆட்டம் யார் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார் என்பதை தீர்மானிக்க உள்ளது.
மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய மகளிர் ஐ.பி.எல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு மும்பை அணியும் டெல்லி அணியும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக உத்தர பிரதேச அணி நுழைந்துள்ளது.
முதலிடம் யாருக்கு?
அடுத்த சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய இரண்டாவது ஆட்டம் யார் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார் என்பதை தீர்மானிக்க உள்ளது.
யாஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், நாட் ஸ்கிவர்-பிரண்ட், அமெலியா கெர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர் ஆகிய பலம் வாய்ந்த வீராங்கனைகளை கொண்ட மும்பை அணி, தொடர் முழுவதுமே ஆதிக்கம் செலுத்து வருகிறது.
மும்பை அணிக்கு அடுத்தபடியாக அல்லது அதற்கு இணையாக பலம் வாய்ந்த அணியாக டெல்லி உள்ளது. மெக் லானிங், ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ், தானியா பாட்டியா ஆகிய வீரர்கள் அந்த அணியின் பலமாக கருதப்படுகின்றனர்.
பலம் வாய்ந்த அணிகள் மோதல்:
இப்படி, தொடரின் இரண்டு பலம் வாய்ந்த அணிகள் இன்று மோதியதால் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக இந்த போட்டி அமைந்தது. நேவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், அதற்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. யாஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். நாட் ஸ்கிவர்-பிரண்ட், ரன் எதுவும் எடுக்காமலும் அமெலியா கெர் 8 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை பறி கொடுத்தனர்.
பூஜா வஸ்த்ராகர், அதிகபட்சமாக, 26 ரன்களை எடுத்தார். ஹர்மன்ப்ரீத் கவுரும், இஸ்ஸி வோங்கும் தலா 23 ரன்கள் எடுத்துள்ளனர். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை எடுத்தது. இதனால், 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி களமிறங்கியது.
புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஆடிய டெல்லி அணி, 9 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
புள்ளி பட்டியல்:
7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 6 புள்ளிகளை பெற்றுள்ளது உத்தர பிரதேச அணி. குஜராத் அணியை பொறுத்தவரையில், 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்விகள் என நான்கு புள்ளிகளை பெற்றுள்ளது குஜராத் அணி.
7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 5 போட்டிகளில் வெற்றிபெற்று 10 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தை பிடித்துள்ள டெல்லி அணி, 7 போட்டிகளில் 5 வெற்றிகள், 2 தோல்வி பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி, 2 வெற்றி 5 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது.