Kohli RCB IPL: போட்றா வெடிய..! கோலி ரசிகர்கள் கொண்டாட்டம், மீண்டும் பெங்களூர் அணி கேப்டனாகவுள்ளதாக தகவல்
Kohli RCB IPL: ஐபிஎல் 2025 தொடரில் விராட் கோலி மீண்டும், பெங்களூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Kohli RCB IPL: ஐபிஎல் 2025 தொடரில் விராட் கோலி மீண்டும், பெங்களூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் அணி கேப்டனாகிறார் விராட் கோலி?
டூப்ளெசிஸ் ஏலத்திற்கு முன்பே அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும், அதன் காரணமாக கோலி மீண்டும் கேப்டனாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 2013ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, கோலி பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கோலி ஏற்கனவே நிர்வாகத்துடன் பேசி வந்ததாகவும், RCB முகாமில் தலைமைத்துவ வெற்றிடம் இருக்கும் நேரத்தில் முன்னேற விரும்புவதாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 40 வயதான ஃபாஃப் டு பிளெசிஸ், கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூர் அணியை வழிநடத்தி வந்தார். ஆனாலும், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அந்த அணியின் கனவு தற்போது வரை நிறைவேறவில்லை. இந்நிலையில், டூப்ளெசியின் வயதை கருத்தில் கொண்டு பெங்களூர் அணியை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும், கோலி மீண்டும் கேப்டனாக உள்ளதாக ஆர்சிபி அணியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோலி தலைமையிலான பெங்களூர் அணி 4 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2016ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், வார்னர் தலைமயிலான ஐதராபாத் அணியிடம் கோப்பை வெல்லும் வாய்ப்பை பெங்களூர் அணி இழந்தது.