SRH vs KKR live score : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி : 7 விக்கெட் வித்தியாசத்தில் SRH வெற்றி!
கேன் வில்லியம்சன் தலைமையில் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
LIVE
Background
ஐ.பி.எல். தொடரின் 25வது ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையில் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
SRH vs KKR live score : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி : 7 விக்கெட் வித்தியாசத்தில் SRH வெற்றி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
SRH vs KKR live score : 71 அடித்து அட்டகாசம் செய்த திரிபாதி அவுட்!
கொல்கத்தா பௌலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி 37 பந்துகளில் 71 ரன்கள் குவித்த திரிபாதி ரசல் வீசிய 15 வது ஓவரில் அவுட்டானார்.
SRH vs KKR live score : அடிப்பது ஒன்றே இலக்கு... அடிச்சு நொறுக்கு..கொல்கத்தா பௌலர்களை கிழிக்கும் திரிபாதி!
களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிவந்த ராகுல் திரிபாதி,21 பந்துகளில் 4 பௌண்டரிகள், 4 சிக்சர்கள் அடித்து அரைசதம் கடந்தார்.
SRH vs KKR Live Score: முதல் பால் போர்... அடுத்த பால் அவுட்... வில்லியம்சனை விரட்டிய ரசல்!
ரசல் வீசிய 6 வது ஓவரில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில்லியம்சன் 16 பந்துகளில் 17 ரன்கள் அடித்து க்ளீன் போல்டானார்.
SRH vs KKR Live Score: 4 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 27/1
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.