RR vs RCB IPL 2023: ராஜஸ்தான் வேகத்துக்கு ஈடுகொடுக்குமா பெங்களூரூ? டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
RR vs RCB IPL 2023: ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
![RR vs RCB IPL 2023: ராஜஸ்தான் வேகத்துக்கு ஈடுகொடுக்குமா பெங்களூரூ? டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..! RR vs RCB IPL 2023: Royal Challengers Bangalore have won the toss and have opted to bat RR vs RCB IPL 2023: ராஜஸ்தான் வேகத்துக்கு ஈடுகொடுக்குமா பெங்களூரூ? டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/14/d8264f692a8237a2632f392bb3b5dc241684056637586728_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
RR vs RCB IPL 2023:
ஐபிஎல் தொடரின் இன்றைய 60வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டும்.
ஐபிஎல் 16வது சீசனில் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களான இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஃபாப் டு பிளெசிஸ் இடையேயான போட்டியாகவும் இன்று இருக்கும். ஜெய்ஸ்வால் மற்றும் டு பிளெசிஸ் இருவரும் அட்டகாசமான பார்மில் உள்ளனர். இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். டு பிளெசிஸ் 11 இன்னிங்ஸ்களில் 6 அரை சதங்கள் உட்ப 576 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் 4 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 575 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இன்றைய போட்டியில் இருவரும் அதிரடி காட்டினால் ரசிகர்களுக்கு விருந்துதான். மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான தோல்விக்கு பிறகு பெங்களூரு அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் முனைப்பில் களமிறங்கும். மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த வியாழக்கிழமை நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதே வெற்றிபாதையை தொடர ராஜஸ்தான் முயற்சிக்கும்.
மேலும், ஜாஸ் பட்லர் ஜோ ரூட், ட்ருவ் ஜூரல் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மியர் ஆகியோர் பெங்களூரு அணிக்கு பயம் காட்டலாம். யுஸ்வேந்திர சாஹல் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவருடன் டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறார்கள்.
பெங்களூரு அணியை பொறுத்தவரை விராட் கோலியும், மேக்ஸ்வெல்லும் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்களுடன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் கைகொடுத்தால் பெங்களூரு அணி வெற்றிபெறும்.
முகமது சிராஜ் 11 போட்டிகளில் 15 விக்கெட்களை வீழ்த்தியது மட்டுமில்லாமல் அதிக டாட் பந்துகளை வீசி வெற்றிகரமான பந்துவீச்சாளராக உள்ளார். ஜோஷ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல் மற்றும் விஜய்குமார் வைஷாக் போன்றவர்களின் ஆதரவு சிராஜுக்குத் தேவை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)