RCB NEW JERSEY : கெத்து கோலி..! மாஸ் டுப்ளிசிஸ்..! அசத்தல் லுக் ஜெர்சியை அறிமுகம் செய்த ஆர்.சி.பி..!
RCB NEW JERSEY : நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஜெர்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அறிமுகம் செய்துள்ளது.
ஐ.பி.எல். தொடரில் இந்த முறை புதிய உத்வேகத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியுள்ளது. கடந்த தொடருடன் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி விலகிய நிலையில், அந்த அணியின் புதிய கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
New season. New threads. 🔥
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 12, 2022
Time to #PlayBold while looking #Bold. 👊🏻#RCBUnbox #UnboxTheBold #ForOur12thMan #IPL2022 pic.twitter.com/2GkFiMkKro
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய கேப்டனாக பாப் டுப்ளிசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த அணியின் புதிய ஜெர்சியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பச்சை, மஞ்சள் நிற டீ சர்ட்டுடன் கேப்டன் அறிமுக நிகழ்ச்சியில் டுப்ளிசிஸ் பங்கேற்றதால் பலரும் இந்த டீ சர்ட்தான் புதிய சீருடை என்று நினைத்தனர். ஆனால், ஆர்.சி.பி. தனது ஆஸ்தான நிறமான சிவப்பு நிறத்துடன் கருப்பு நிறத்தை கலந்து தனது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.
“I absolutely love it and the moment I wore it, I felt something special. I can definitely say, this is my most favourite RCB jersey, EVER!” 🤩
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 12, 2022
King Kohli loves the new #RCBJersey for #IPL2022 and so do we!❤️@imVkohli #PlayBold #RCBUnbox #UnboxTheBold #ForOur12thMan #IPL2022 pic.twitter.com/hIuLquniHh
இந்த ஜெர்சி தொடர்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது, “ஹாய்..! நீங்கள் எல்லாம் என்னை ஆர்.சி.பி.யின் புதிய ஜெர்சியில் பார்க்கிறீர்கள். எனக்கு இந்த டிசைன் மிகவும் பிடித்துள்ளது. அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம் அருமையாக உள்ளது. ஆர்.சி.பி. லைன் என்ற அலங்காரம் நன்றாக உள்ளது. அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ளது. என்னுடைய ஜெர்சி எப்படி இருக்குமோ அதேபோல உள்ளது. பின்னால், எண் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. நான் இதை கண்டிப்பாக சொல்ல வேண்டும். ஆர்.சி.பி.யின் ஜெர்சிகளிலே இதுதான் எனது மனதை மிகவும் கவர்ந்தது.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விராட்கோலி அணிந்த இந்த புதிய ஜெர்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூர் அணியின் தூணாக ஐ.பி.எல். தொடர் தொடங்கியது முதலே விளங்கி வருகிறார் விராட்கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : RCB New Captain : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டுப்ளிசிஸ் நியமனம்...! அதிரடி அறிவிப்பு..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்