(Source: Poll of Polls)
PBKS New Head Coach: பஞ்சாப் கிங்க்ஸின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!
பஞ்சாப் கிங்க்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
பஞ்சாப் கிங்க்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்படுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்க் நியமிக்கப்பட்டுள்ளதார். நான்கு ஆண்டு காலம் தலைமைப் பயிற்சியாளராக தொடர ரிக்கியுடன் பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங்,”பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் வாய்ப்பை வழங்கியதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். இத்தனை ஆண்டுகளாக அணிக்கு உறுதுணையாக இருக்கும் ரசிகர்களுக்கு பரிசு வழங்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. புதிய சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டில் இருந்து பஞ்சாப் கிங்க்ஸ் அணி இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றதில்லை. இந்த முறை கோப்பையை வென்று கொடுக்கும் பொறுப்பு ரிக்கி பாண்டிங்கிற்கு உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 7 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாலராக இருந்தார். இதுவரை பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ட்ரெவர் பெய்லிஸ் இருந்தார். 2024-ம் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி 9-வது இடத்தைப் பிடித்தது. 2014-ம் ஆண்டில் இருந்து பஞ்சாப் அணி ப்ளே ஆப் தகுதிச் சுற்றுகளுக்கு செல்லவில்லை. ஷிகர் தவான் ஓய்வு அறிவிப்பிற்கு பிறகு அணியின் கேப்டன் தேர்வு பாண்டிங் முடிவெடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. ரிக்கி பாண்டிங் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருந்தார். 2013-2016 ஆண்டில் மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.
கடந்த ஏழு ஐ.பி.எல். சீசன்களில் பிஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் முதல் ஐந்து இடத்தை கூட பிடிக்கவில்லை. சஞ்சய் பங்கர் கிரிக்கெட் மேம்பாடு, சார்லஸ் லாங்வெல்ட் வேகப்பந்து வீச்சு துறை, சுனில் ஜோசி ஸ்பின் பவுலர்களின் பயிற்சியாளார் என ஆகியோர் குழுவில் உள்ளனர். இப்போது பஞ்சாப் அணியில் புதிய கேட்பன் தேர்வு, அணியின் சிறந்த செயல்பாடு ஆகியவை ரிக்கி பாண்டிங் முக்கியமான பொறுப்பான உள்ளது.