IPL 2022: திடீரென ஐபிஎல் நடந்த மைதானத்துக்குள் ஓடிய இளைஞர்! வீரர்கள் ஷாக்! பாய்ந்த வழக்கு.!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, திடீரென மைதானத்தில் நுழைந்த இளைஞரை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians)மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது MCA மைதானத்தில் அனுமதியின்றி திடீரென நுழைந்த 26 வயது இளைஞரை புனே காவல்துறை கைது செய்துள்ளது.
நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியின் போது, ரசிகர் ஒருவர் மீது மைதானத்தினுள் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர், சதாரா மாவட்டத்தில் உள்ள கண்டாலா தாலுகாவைச் சேர்ந்த தஷ்ரத் ஜாதவ். இரவு 10.30 மணி முதல் 10.45 மணி வரை போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரை சந்திப்பதற்காக மைதானத்திற்குள் சென்றார்.
அவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 447 (குற்றவியல் அத்துமீறல்) மற்றும் 353 (அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உதவி ஆய்வாளர் துர்காநாத் சாலி கூறியதாவது: பலமுறை எச்சரித்த போதிலும், அந்த நபர் வேலியைத் தாண்டி மைதானத்திற்குள் நுழைந்தார். அவர் முதலில் விராட் கோலியிடம் Fist bump கொடுத்தார், பின்னர் ரோஹித் சர்மாவை நோக்கி ஓடினார். இதையடுத்து அவரை பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் மைதானத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் பலமுறை மைதானத்தில் நுழைய முயற்சி செய்திருக்கிறார்.” என்றார்.
ஐ.பி.எல். போட்டிகளின்போது ரசிகர்கள் ஆர்வத்தில் கிரிக்கெட் வீரர்களுடன் பேச, ஃபோட்டோ எடுத்து கொள்ள அவ்வபோது அனுமதி இல்லாமல் மைதானத்தில் உள்ளே நுழைவது வழக்கமானது. அந்தவகையில், நேற்றைய போட்டியின் நடுவே, ரசிகர் ஒருவர் விராட் கோலியை நோக்கி ஓடினார். அப்போது அவ ரசிகருக்கு Fist bumb கொடுத்தார். அடுத்ததாக,. ரோஹித் ஷர்மாவை கட்டியணைக்க ஓடிய ரசிகருக்கு, ரோஹித் அவருக்கு இரண்டு கையையும் காற்றில் பற்றக்கவிட்டபடி, ஹக் செய்வதுபோல் தூரத்தில் இருந்தே, அவருக்கு ஹக் வழங்கினார். ரோஹித் ஷர்மாவின் (Air Hug) இந்த செயலை விராட் கோலி தன் கையசைவில் பாராட்டினார். ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைவது வழக்கமானதுதான் என்றாலும் இது வீரர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாகும் செயல் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் முறையான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்