MS Dhoni IPL 2023: "I will definitely Play".. அடுத்த ஆண்டு சென்னைக்காக விளையாடுவேன்..! தல தோனி சொன்ன ஹேப்பி நியூஸ்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டும் விளையாடுவேன் என்றும் கேப்டன் தோனி கூறியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் இன்று தனது கடைசி போட்டியில் ஆடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி அடுத்தாண்டு கிரிக்கெட் விளையாடுவதை உறுதி செய்தார். அவர் டாசிற்கு பிறகு கூறியதாவது, சென்னை அணிக்காக அடுத்தாண்டு நிச்சயமாக விளையாடுவேன். ஏனென்றால், அப்படி செய்யாவிட்டால் அது சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது போலாகிவிடும். சென்னை ரசிகர்களுக்காக அது செய்வேன்.” என்று கூறினார்.
Y. E. S! 👏 👏
— IndianPremierLeague (@IPL) May 20, 2022
𝗠𝗦 𝗗𝗵𝗼𝗻𝗶 𝗪𝗶𝗹𝗹 𝗕𝗲 𝗕𝗮𝗰𝗸! 💛 💛
Follow the match ▶️ https://t.co/ExR7mrzvFI#TATAIPL | #RRvCSK | @msdhoni | @ChennaiIPL pic.twitter.com/mdFvLE39Kg
சென்னை அணியின் அசைக்க முடியாத தூணாக, ஐ.பி.எல். தொடரின் சிறந்த கேப்டனாக வலம் வரும் மகேந்திர சிங் தோனியின் வயது காரணமாக அவர் அடுத்தடுத்த ஐ.பி.எல். தொடர்களில் விளையாடுவாரா? என்று கேள்வி எழுந்தது. ஆனாலும், அவரது உடற்தகுதியும், பார்மும் தோனியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது. இந்த சூழலில் தோனி அடுத்த சீசனும் விளையாடுவேன் என்று கூறியிருப்பது சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.
கடந்த முறை சென்னை அணியின் ரசிகர்களுடன் உரையாடிய கேப்டன் தோனி, தனது கடைசி ஐ.பி.எல். போட்டியை சென்னை மண்ணில்தான் ஆடுவேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு தொடர் முழுவதும் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்றதால் தோனியின் ஆசை இந்த தொடரில் நிறைவேறவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்