LSG vs RCB: நூறாவது ஐபிஎல் இன்னிங்ஸில் சதத்தை தவறவிட்ட டூபிளசிஸ்- ஆர்சிபி 181 ரன்கள் குவிப்பு !
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 181 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த விராட் கோலி முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே லக்னோ அணி 2 விக்கெட் எடுத்து அசத்தியது. இதைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வேல் சற்று அதிரடி காட்டினார். அவர் 23 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பிரபுதேசாய் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் கேப்டன் டூபிளசிஸ் தனியாக பெங்களூரு அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார். அவர் 40 பந்துகளில் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். இதனால் 15 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. 16ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் ஷாபாஸ் அகமது 26 ரன்கள் எடுத்திருந்தப் போது ரன் அவுட்டாகினார்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 19, 2022
A brilliant 96 from the Skipper propels #RCB to a total of 181/6 on the board.
Scorecard - https://t.co/9Dwu1D2Lxc #LSGvRCB #TATAIPL pic.twitter.com/6O4KUFhge0
அரைசதம் கடந்த பிறகு டூபிளசிஸ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடிக்க தொடங்கினார். 18 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு164 ரன்கள் எடுத்தது. கடைசி 2 ஓவர்களில் டூபிளசிஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டுவார்கள் என்று கருதப்பட்டது. மேலும் சிறப்பாக விளையாடிய டூபிளசிஸ் ஐபிஎல் வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் டூபிளசிஸ் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஐபிஎல் வரலாற்ரில் இரண்டாவது முறையாக 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்