மேலும் அறிய

IPL Points table: ரிங்கு சிங்கின் அதிரடியால் கொல்கத்தா த்ரில் வெற்றி.. ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிளில் மாற்றம்

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் சீசன்:

16வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அதோடு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்கட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

நேற்றைய போட்டிகள்:

குஜராத் அணிக்கு எதிராக 205 ரன்கள் என்ற இமாலய நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி, ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டத்தால் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இது நடப்பு தொடரில் அந்த அணி பெறும் இரண்டாவது வெற்றி ஆகும். நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்த ஐதராபாத் அணி, பஞ்சாப் அணியின் ஹாட்ரிக் வெற்றி பெறும் எண்ணத்தை தவிடுபொடியாக்கியது. இதனால், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளன என்பதை தற்போது அறியலாம்.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
ராஜஸ்தான் 3 2 1 4
கொல்கத்தா 3 2 1 4
லக்னோ 3 2 1 4
குஜராத் 3 2 1 4
சென்னை  3 2 1 4
பஞ்சாப் 3 2 1 4
பெங்களூரு  2 1 1 2
ஐதராபாத் 3 1 2 2
மும்பை 2 0 2 0
டெல்லி 3 0 3 0

முதல் நான்கு இடங்களில் யார்?

ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் தலா 3 போட்டிகளில் விளையாடி, தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்று இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 5 மற்றும் 6வது இடங்களில் உள்ளன. பெங்களூரு அணி விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியையும், ஐதராபாத் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 தோல்வி மற்றும் ஒரு வெற்றியையும் பெற்று 7 மற்றும் 8வது இடங்களை ஆக்கிரமித்துள்ளன. மும்பை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும், டெல்லி அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை கண்டு, முறையே கடைசி இரண்டு இடங்களை   பிடித்துள்ளன. 

இன்றைய போட்டி:

பெங்களூருவில் இன்று நடைபெறும் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியை, கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஒருவேளை லக்னோ அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். அதேநேரம், பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காண முடியும். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget