ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
ஆர்சிபி அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இருவருக்கும் இன்று பிறந்தநாள் ஆகும். சாம்பியன் பட்டம் பெற்று ரசிகர்களுக்கு அதை பிறந்தநாள் விருந்தாக அளித்துள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19வது சீசன் கோப்பையை ஆர்சிபி அணி கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை இரண்டாவது முறையாகவும், 2வது முறையாக தொடர்ச்சியாகவும் வென்று அசத்தியுள்ளனர்.
சாம்பியன் ஆர்சிபி:
ஐபிஎல் தொடரிலே மிக அதிக அளவில் ஏளனத்திற்கு ஆளான ஒரு கிரிக்கெட் அணி ஆர்சிபி. இந்த சூழலில், இன்று ஆர்சிபி ஆடவர் அணியிடம் 2 கோப்பைகளும், ஆர்சிபி மகளிர் அணியிடம் 2 கோப்பைகளும் உள்ளது. ஆர்சிபி ஆடவர் அணியின் இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக்.
மாஸ்டர் மைண்ட்:
ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஒரு வீரராக தனது கிரிக்கெட் கேரியரை முடித்துக்கொண்ட தினேஷ் கார்த்திக், அதே அணியின் ஆலோசகராகவும், பேட்டிங் பயிற்சியாளராகவும் களமிறங்கினார். 2025 ஏலத்தில் யாரை எடுக்கலாம்? என்ன ஆர்டரில் எடுக்கலாம்? பலவீனத்தை சரி செய்வது எப்படி? பந்துவீச்சாளர்களாக அணியில் யார்? யாரை கொண்டு வர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். ஆர்சிபி அணியின் கேப்டனாக ரஜத் படிதாரை நியமிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
தினேஷ் கார்த்திக் ஒரு பேட்டிங் பயிற்சியாளராக படிக்கல், படிதார், ஜிதேஷ் சர்மா ஆகியோரின் பேட்டிங் திறனை நன்றாகவே பட்டை தீட்டியுள்ளார். மேலும், மிடில் ஆர்டரையும் முறையாக வலுப்படுத்தியுள்ளார். வீரர்களின் மனநிலையிலும் மிகுந்த கவனமாக செயல்பட்டார்.
ரஜத் படிதார்:
ஆர்சிபி ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளவர் ரஜத் படிதார். கும்ப்ளே, ராகுல் டிராவிட், வெட்டோரி, கோலி, டுப்ளிசிஸ் என யாருமே செய்ய முடியாத சாதனையை ரஜத் படிதார் படைத்துள்ளார். இவர் கேப்டனாக பொறுப்பேற்றபோது அதிகளவில் இவரை விமர்சித்தனர். ஆனால், கடந்த முறை பட்டம் வென்று விமர்சனத்தை வாயடைக்க வைத்தார். இந்த முறையும் தனது பாணியில் ஐபிஎல் பட்டத்தை வென்று ரோகித் சர்மா, தோனி சாதனையை சமன் செய்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் ஒரு பேட்டிங் பயிற்சியாளராக படிக்கல், படிதார், ஜிதேஷ் சர்மா ஆகியோரின் பேட்டிங் திறனை நன்றாகவே பட்டை தீட்டியுள்ளார். மேலும், மிடில் ஆர்டரையும் முறையாக வலுப்படுத்தியுள்ளார். வீரர்களின் மனநிலையிலும் மிகுந்த கவனமாக செயல்பட்டார்.
பிறந்தநாள் பரிசு:
ஆர்சிபி அணியை மொத்தமாக உருமாற்றிய தினேஷ் கார்த்திக் மற்றும் ரஜத் படிதார் இருவருக்கும் இன்று பிறந்தநாள். இவர்களின் பிறந்த நாள் பரிசாக ஐபிஎல் கோப்பை கிடைத்துள்ளது. ரஜத் படிதாருக்கு இன்று 33வது பிறந்தநாள் ஆகும். தினேஷ் கார்த்திக்கிற்கு இன்று 40வது பிறந்தநாள் ஆகும்.
ஐபிஎல் பட்டத்தை 2வது முறையாக பெற்றுத்தந்த இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Before You Go
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ட்ரெண்டிங் செய்திகள்



















