![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
KKR vs MI Live Score:KKR vs MI Live Score: ரஹானே ஆனார் அவுட்... கொல்கத்தா வின் பண்றது டவுட்!
IPL 2022, Match, KKR vs MI: அணிகள் இடையே நடைபெறும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
![KKR vs MI Live Score:KKR vs MI Live Score: ரஹானே ஆனார் அவுட்... கொல்கத்தா வின் பண்றது டவுட்! KKR vs MI Live Score:KKR vs MI Live Score: ரஹானே ஆனார் அவுட்... கொல்கத்தா வின் பண்றது டவுட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/06/8e68f54a3c64ae89081a8ad1f847c69c_original.jpg)
Background
IPL 2022, Match, KKR vs MI:
ரோகித் சர்மா தலைமையிலான 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதல் இரு ஆட்டங்களில் முறையே டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இரு ஆட்டங்களிலும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அரைசதம் அடித்தார். இளம் வீரர் திலக் வர்மாவின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முருகன் அஸ்வின் நன்றாக வீசுகிறார்கள். மற்றவர்களின் ஆட்டம் குறிப்பிடும்படி இல்லை. காயத்தால் ஒதுங்கி இருந்த பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் பயிற்சி மேற்கொண்டு வருவதால் இன்றைய ஆட்டத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வருகை தந்தால் பேட்டிங் வலுப்படும். பொதுவாக மும்பை அணி, தொடரை மெதுவாகத்தான் தொடங்கும். போக போக அவர்களின் ஆட்டம் சூடுபிடிக்கும். இனி வெற்றிக் கணக்கை தொடங்குவதில் அதீத தீவிரம் காட்டுவார்கள்.
இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 வெற்றி (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக), ஒரு தோல்வி (பெங்களூவுக்கு எதிராக) என்று 4 புள்ளிகளுடன் நல்ல நிலையில் உள்ளது. பந்து வீச்சில் உமேஷ் யாதவ் (8 விக்கெட்), சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, டிம் சவுதி மிரட்டுகிறார்கள். இப்போது அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்சும் இணைந்து விட்டார். இதே போல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரஹானே, வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல் என்று பேட்டிங்கிலும் பலம் பொருந்திய அணியாக திகழ்கிறது. பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ரஸ்செல் 8 சிக்சருடன் 70 சிக்சர் குவித்து அமர்க்களப்படுத்தினார். எனவே மும்பைக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
ஆரம்பத்தில் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு பனிப்பொழிவு கைகொடுத்ததால் 'டாஸ்' முக்கிய பங்கு வகித்தது. ஆனால் இப்போது பனியின் தாக்கத்தை கணிசமாக குறைக்க மைதானத்தில் ரசாயனம் தெளிக்கப்படுகிறது. இதனால் முதலில் பேட் செய்யும் அணிகளும் வெற்றி பெறத் தொடங்கி விட்டதால் 'டாஸ்' பெரிய பிரச்சினையாக இருக்காது. வியூகத்தை கச்சிதமாக அமல்படுத்துவதை பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.
பொறுமையுடன் ஆடிய வெங்கடேஷ்... வான வேடிக்கைக் காட்டிய கம்மின்ஸ்.. கொல்கத்தா அசத்தல் வெற்றி!
KKR vs MI, Match : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
KKR vs MI Live Score: அடித்த பால்... பிடித்த கேட்ச்... ரஸல் 11 ரன்களில் ஏமாற்றம்!
மில்ஸ் வீசிய 14 ஓவர் முதல் பந்தில் ரசல் தலா ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 11 ரன்களில் ப்ரீவிஸிடம் கேட்ச் ஆனார்.
KKR vs MI Live Score: "ராங்" ராணா 8 ரன்களில் அவுட்...
முருகன் அஷ்வின் வீசிய 12 வது ஓவரில் நிதிஷ் ராணா 8 ரன்களில் அவுட்டானார். கொல்கத்தா அணிக்கு தற்போது 49 பந்துகளில் 79 ரன்கள் தேவையாக உள்ளது.
KKR vs MI Live Score: பில்லிங்ஸ் 17 ரன்களில் காலி... மும்பை ரசிகர்கள் எல்லாரும் ஜாலி!
கொல்கத்தா அணியில் அதிரடியாக ஆடிகொண்டிருந்த பில்லிங்ஸ் 17 ரன்களில் அவுட் ஆனார்.
KKR vs MI Live Score: 9 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 57 /2
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)